டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வாங்கினாலும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை: தங்கமணி குற்றச்சாட்டு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: ‘​டாஸ்மாக்கில் பணி​யாற்​றும் திமுக தொழிற்​சங்க நிர்​வாகி​கள், ஒரு பாட்​டிலுக்கு 20 ரூபாய் கூடு​தலாக வாங்​கி​னாலும் அவர்​கள் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​படு​வ​தில்​லை’ என முன்​னாள் அமைச்​சர் தங்​கமணி குற்​றம்​சாட்​டி​ உள்​ளார்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்மாக் ஊழியர்​கள் தொடர் போராட்​டங்களை நடத்தி வரு​கின்​றனர். அவர்​களுக்கு ஆதரவு தெரிவிக்​கும் வகை​யில், அதி​முக​வின் அண்ணா தொழிற்​சங்​கம் சார்​பில் நேற்று சென்​னை​யில் பேரணி நடை​பெற்​றது.

முன்​னாள் அமைச்​சர்​கள் தங்​கமணி, ஜெயக்​கு​மார் ஆகியோர் தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தப் பேரணி, சிந்​தா​ரிப்​பேட்​டை​யில் தொடங்கி எழும்​பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலு​வல​கத்​தில் நிறைவடைந்​தது. இதில் முன்​னாள் அமைச்​சர் தங்​கமணி பேசி​ய​தாவது:

மாதம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம்: அரசு டாஸ்மாக் கடைகளை குறைப்​ப​தாகக் கூறி​விட்​டு, தங்​களுக்கு நெருக்​க​மானவர்​களுக்​காக ஊருக்கு ஊர் 10-க்​கும் மேற்​பட்ட எஃப்​.எல்.2 உரிமங்​களை வாரி வழங்​கி​விட்​டனர்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு மாதம் ரூ.5,000 கோடி வரு​மானம் கிடைக்​கிறது. ஆனாலும், அந்த வரு​மானத்தை ஈட்​டித் தரும் ஊழியர்​களின் நியாய​மான கோரிக்​கைகளை அரசு நிறைவேற்ற மறுக்​கிறது.

நீதி​மன்ற உத்​தரவு என்ற பெயரில், காலி பாட்​டில்​களை ஊழியர்​களே திரும்​பப்​பெற வேண்​டும் என நிர்​வாகம் கட்​டாயப்​படுத்​துகிறது. மிகக் குறுகிய இடத்​தில் இயங்​கும் டாஸ்மாக் கடைகளில், காலி பாட்​டில்களைச் சேமித்து வைக்க இடவசதி இல்​லை.

இதனால் ஏற்​படும் சுகா​தா​ரச் சீர்​கேட்​டால் ஊழியர்​களுக்​குத் தொற்​று​நோய்​கள் பரவு​கின்​றன. எனவே, காலி பாட்​டில்களைத் திரும்​பப் பெறுவதற்கு தனி​யாக குடோன் வசதி செய்து தரப்பட வேண்​டும்.

பாரபட்ச நடவடிக்கை: திமுக தொழிற்​சங்​கத்​தைச் சேர்ந்​தவர்​கள் பாட்​டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வாங்​கினாலும் நடவடிக்கை இல்​லை. ஆனால், அண்ணா தொழிற்​சங்க நிர்​வாகி​கள் சிறு தவறு செய்​தால்​கூட உடனடி​யாகப் பணி இடைநீக்​கம் செய்​யப்​படு​கிறார்​கள். வரும் தேர்​தலில் பழனி​சாமி மீண்​டும்​ முதல்​வர்​ ஆ​வார்​. அப்​போது ​டாஸ்மாக்​ தொழிலா​ளர்​களுக்​கு விடிவு ​காலம்​ பிறக்​கும்​. இவ்​​வாறு அவர்​ பேசி​னார்​.

<div class="paragraphs"><p>டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | <em>படம்: எஸ்.சத்தியசீலன்</em> |</p></div>
வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்: ஆதரவு தெரிவிக்க வந்த சீமான் கைதாகி விடுதலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in