காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தில் வாழி திருநாமம் பாட தென்கலை பிரிவினருக்கே முழு உரிமையுள்ளது: நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தில் வாழி திருநாமம் பாட தென்கலை பிரிவினருக்கே முழு உரிமையுள்ளது: நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
2 min read

சென்னை: காஞ்சிபுரம் வரத​ராஜ சுவாமி கோயில் பிரம்​மோற்சவ விழா​வில் சுவாமி முன்​பாக வேத மந்​திரங்​கள் முழங்​கி, வாழி திரு​நாமம் பாட தென்கலை பிரி​வினருக்கே முழு உரிமை உள்​ளது என சென்னை உயர் நீதி​மன்ற இரு நீதிப​தி​கள் அமர்வு தீர்ப்​பளித்​துள்​ளது, காஞ்​சிபுரம் வரத​ராஜப் பெரு​மாள் கோயில் பிரம்​மோற்சவ விழா​வில் தென்கலை பிரி​வினர் மட்​டும் வாழி திரு​நாமம் மற்​றும் பிரபந்​தம் பாட அனு​ம​தி​யளித்து கோயில் உதவி ஆணை​யர் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து வடகலை பிரி​வினர் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி கடந்த 2022 மே 17-ம் தேதி பிறப்​பித்த உத்​தர​வில், “கோயி​லில் சுவாமியை தரிசனம் செய்​ய​வும், வழி​பாடு செய்து பூஜிக்​க​வும் அனை​வருக்​கும் உரிமை உள்​ளது. மதம் சார்ந்த மரபு மற்​றும் வழி​பாட்டு உரிமை​களில் எவ்​வித பாகு​பாடும் பார்க்கக்கூடாது.

வடகலை, தென்கலை பிரி​வினருக்​கிடையே நீடித்து வரும் பிரச்​சினை​யால் கோயி​லில் சுவாமியை நிம்​ம​தி​யாக தரிசனம் செய்ய வரும் பக்​தர்​களுக்கு எவ்​வித இடையூறும் ஏற்​படக்​கூ​டாது. எனவே, முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரி​வினரும், அவர்​களுக்​குப் பின்​னால் வடகலை பிரி​வினர் மற்​றும் சாதாரண பக்​தர்​களும் அமர வேண்​டும்.

தென்கலை பிரி​வினர் முதலில் ஸ்ரீ சைலேச தயா​பாத்​திர​மும், அதன்​பிறகு வடகலை பிரி​வினர் ஸ்ரீ ராமானுஜ தயா​பாத்​திர​மும் 10 முதல் 12 விநாடிகள் பாட வேண்​டும். அதன்​பிறகு தென்கலை, வடகலை மற்​றும் பிற பக்​தர்​கள் இணைந்து நாலா​யிர திவ்ய பிரபந்​தம் பாட வேண்​டும். அதன்​பிறகு நிறை​வாக தென்கலை பிரி​வினர் மணவாள மாமுனிகள் வாழித்​திரு​நாம​மும், வடகலை பிரி​வினர் தேசிகன் வாழித்​திரு​நாம​மும் பாட வேண்​டும்” என உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தென்கலை பிரிவைச் சேர்ந்​தவர்​கள் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், எஸ்​.சவுந்​தர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் விஜய்​நா​ராயணன், ஹேமா சம்​பத், ஏ.கே.ஸ்ரீராம் உள்​ளிட்​டோரும், எதிர்​மனு​தா​ரர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஜி.​ராஜகோ​பாலன், வழக்​கறிஞர் அபினவ் பார்த்​த​சா​ர​தி​யும், அறநிலை​யத்​துறை தரப்​பில் என்​.ஆர்​.ஆர்​.அருண் நடராஜனும் ஆஜராகி வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “சு​மார் 200 ஆண்​டு​களாக இந்த பிரச்​சினை நீடித்து வரு​கிறது. கடந்த 1910, 1915, 1963 மற்​றும் 1969-ம் ஆண்​டு​களில் பிறப்​பிக்​கப்​பட்ட தீர்ப்​பு​களின் அடிப்​படை​யில் வரத​ராஜ சுவாமி முன்​பாக ஸ்ரீசைலேச தயா​பாத்​திர​மும், நாலா​யிர திவ்ய பிரபந்​த​மும், மணவாள மாமுனிகள் வாழி திரு​நாமம் பாட​வும் காஞ்​சிபுரத்​தில் வசிக்​கும் தென்கலை பிரி​வினருக்கே முழு உரிமை உள்​ளது. வடகலை பிரி​வினருக்கு இந்த உரிமை நிலை​நாட்​டப்​பட​வில்​லை.

எனவே, இருதரப்​பும் சேர்ந்து பாட வேண்​டுமென்ற தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​கிறோம். மேலும் தென்கலை பிரிவு சார்​பில் சுவாமி முன்​பாக மந்​திரங்​கள் முழங்​கி, பிரபந்​தம் மற்​றும் வாழி திரு​நாமம் பாட அறநிலை​யத்​துறை​யும், போலீ​ஸாரும் தகுந்​த பாது​காப்​பு ஏற்​பாடு​களை செய்​து கொடுக்​க வேண்​டும்​” என்​று அறிவுறுத்​தியுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தில் வாழி திருநாமம் பாட தென்கலை பிரிவினருக்கே முழு உரிமையுள்ளது: நீதிமன்றம் தீர்ப்பு
இலங்கை துயரில் இந்தியா பங்கெடுத்துள்ள நிலையில் அரசியல் லாபத்துக்காக சீமான் அறிக்கை: தமிழிசை விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in