

சென்னை: டெண்டர் முறைகேடு காரணமாக மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
அப்போது தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய டெண்டர் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வெளிப்படை தன்மை இல்லாமல், அவசரகதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடப்பதற்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் (வருவாய்) வி.காசி மற்றும் மரபுசாரா எரிசக்தி தலைமை பொறியாளர் பி.சந்திரசேகரன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஓய்வுபெற்ற இயக்குநர் (தொழில்நுட்பம்) பசுமை எரிசக்தி கழகம் எஸ்.மங்களநாதனின் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான முறையான விசாரணை நடைபெற்று மின்வாரிய விதிமுறைகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.