படிவத்தை பூர்த்தி செய்ய 10 ரூபாய் ஃபார்முலா! - எஸ்ஐஆரில் கலக்கும் கடலூர் திமுக

படிவத்தை பூர்த்தி செய்ய 10 ரூபாய் ஃபார்முலா! - எஸ்ஐஆரில் கலக்கும் கடலூர் திமுக
Updated on
1 min read

ஒரு பக்​கம், எஸ்​ஐஆர் இப்​போது வேண்​டாமே என திரும்​பத் திரும்​பச் சொல்​லும் திமுக இன்​னொரு பக்​கம், எஸ்​ஐஆர் பணி​களை கவன​மாக கண்​காணித்து வாக்​காளர்​களை விடு​தலின்றி சேர்த்து முடிக்​கும் பணி​யிலும் கட்​சி​யினரை களத்​தில் தீவிரப்​படுத்தி வரு​கிறது.

அதனால் வரு​வாய்த் துறை​யினர் புறக்​கணிப்​ப​தாகச் சொல்​லி​விட்ட நிலை​யிலும் திமுக-​வினர் தெருக்​களில் டேபிள் சேரைப் போட்​டுக் கொண்டு எஸ்​ஐஆர் பணி​களில் மும்​முர​மாக ஈடு​பட்டு வரு​கி​றார்​கள்.

எஸ்​ஐஆர் பணி​களில் ஈடு​படும் திமுக-​வினருக்கு தேவை​யான வசதி​களை செய்து கொடுக்​கும்​படி கட்சி நிர்​வாகி​களுக்கு திமுக தலைமை கண்​டிப்​பான உத்​தர​வு​களை​யும் பிறப்​பித்​திருக்​கிறது. இதையடுத்​து, எஸ்​ஐஆர் பணி​களை உடன்​பிறப்​பு​கள் முகம் சுளிக்​காமல் முடித்​துக் கொடுக்​கும் வித​மாக கடலூர் மாவட்ட திமுக பொறுப்​பாளர்​கள் புதிய உத்​தியை இறக்​குமதி செய்​திருக்​கி​றார்​கள்.

அதாவது, எஸ்​ஐஆர் களப்​பணி​யில் இருக்​கும் திமுக தொண்​டர் களுக்கு ஒரு படிவத்தை முழு​மை​யாக பூர்த்தி செய்து கொடுக்க ரூ.10 வீதம் அளித்து வரு​கி​றார்​கள்.

இந்​தச் செலவை அந்​தந்​த பகு​தி​யில் இருக்​கும் திமுக நிர்​வாகி​களே ஏற்​றுக் கொள்​கி​றார்​களாம். இப்​படி​யான களப்​புலிகளை களத்​தில் இறக்கி இருப்​ப​தால் வாக்​காளர்​கள் பெரி​தாக எந்​தச் சிரம​மும் படா​மல் எஸ்​ஐஆர் படிவங்​களை பூர்த்தி செய்து வரு​கி​றார்​கள். திமுக-வை தொடர்ந்து ஒரு சில இடங்​களில் அதி​முக-​வினரும் இந்த பத்து ரூபாய் ஃபார்​முலாவை செயல்​படுத்த ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய விருத்​தாசலம் தொகு​திக்கு உட்​பட்ட நல்​லூர் ஒன்​றிய திமுக இளைஞரணி பொறுப்​பாளர் தனசேகர், “ஆமாம் படிவத்தை பூர்த்தி செய்து தரு​வோருக்கு 10 ரூபாய் தரு​கி​றோம். படிவத்​தைப் பூர்த்தி செய்து கொடுக்க வரும் இளைஞர்​கள் தங்​களின் சொந்த வேலை​களை எல்​லாம் விட்​டு​விட்டு வரு​வ​தால் அவர்​களை உற்​சாகப்​படுத்​து​வதற்​காக இந்த சிறிய சன்​மானத்​தைத் தரு​கி​றோம். இதனால் போட்டி போட்​டுக் கொண்டு படிவங்​களைப் பூர்த்தி செய்து கொடுக்​கி​றார்​கள்” என்​றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in