கரூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் முன்பு தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட்

கரூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை தாக்கப்படும் சிசிடிவி காட்சி பதிவு.

கரூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை தாக்கப்படும் சிசிடிவி காட்சி பதிவு.

Updated on
1 min read

கரூர்: கரூர் அருகே அரசுப் பள்​ளி​யில் வகுப்​பறை​யில் மாணவர்​களுக்கு பாடம் நடத்​திக் கொண்​டிருந்த தலைமை ஆசிரியையை தாக்​கிய மற்றொரு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டார்.

கரூர் அருகே சின்​னாண்​டாங்​கோ​வில் ஊராட்சி ஒன்​றி​யத் தொடக்​கப் பள்​ளி​யில் இடைநிலை ஆசிரியை​யாக பணிபுரிந்து வந்​தவர் கலைம​தி. இவர் சரிவர பணிக்கு வரு​வ​தில்லை என்​றும், மாணவர்​களை அடித்து துன்​புறுத்​து​வ​தாக​வும் பெற்​றோர், ஆசிரியர் கழகத்​தினர் அண்​மை​யில் சைல்டு லைனில் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

அதன்​பேரில், மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலகினர் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். மேலும், இதுகுறித்த விசா​ரணை அடிப்​படை​யில் கலைமதி குறித்து அப்​பள்ளி தலைமை ஆசிரியை புவனா அறிக்கை அளித்​துள்​ளார். இதனால் ஆத்​திரமடைந்த கலைம​தி, ஜூலை 29-ம் தேதி வகுப்​பில் மாணவர்​களுக்கு பாடம் நடத்​திக்​கொண்​டிருந்த புவ​னாவை கன்​னத்​தில் கடுமையாக அறைந்​து, அவரை தாக்கி கீழே தள்​ளி​விட்​டுள்​ளார்.

இதைப் பார்த்த மாணவ, மாணவி​கள் கூச்​சலிட்​டனர். இந்தச் சம்​பவம் வகுப்​பறை​யில் இருந்த கண்​காணிப்பு கேம​ரா​வில் பதி​வாகி இருந்​தது. இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது. இதையடுத்​து, இடைநிலை ஆசிரியை கலைமதியை பணி​யிடை நீக்​கம் செய்து மாவட்​டக் கல்வி அலு​வலர் சண்​முகவேல் நேற்று உத்​தர​விட்​டார்.

<div class="paragraphs"><p>கரூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்&nbsp;தலைமை ஆசிரியை தாக்கப்படும் சிசிடிவி காட்சி பதிவு. </p></div>
காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in