டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் வாடிக்கையாளர் கேட்கும் மது வகை அதிக அளவில் விநியோகம்

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் வாடிக்கையாளர் கேட்கும் மது வகை அதிக அளவில் விநியோகம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் டாஸ்​மாக் கடைகளுக்கு மது வகைகளை அனுப்​பும் நடை​முறை​யில் இன்று முதல் மாற்​றம் செய்​யப்​படு​வ​தாக டாஸ்​மாக் நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அனைத்து மண்டல மேலா​ளர்​களுக்​கும் டாஸ்​மாக் நிர்​வாகம் அனுப்​பி​உள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஒவ்​வொரு கடை​யிலும் மது​ வகைகளின் தேவை மற்​றும் எந்த வகை​யான மது​பானம் அதி​கள​வில் கேட்​கப்​படு​கிறதோ அதன் அடிப்​படை​யில் மது​பாட்​டில்​களை கொள்​முதல் செய்ய வேண்​டும். அனைத்து மது​பான விநி​யோகஸ்​தர்​களின் மது​பானங்​களை​யும் சமமாக பிரித்து கடைகளுக்கு அனுப்​பும் தற்​போதைய நடை​முறை முற்​றி​லும் ரத்து செய்​யப்​படு​கிறது.

புதிய நடை​முறையை இன்று முதல் மூத்த மண்டல மேலா​ளர்​கள், மாவட்ட மேலா​ளர்​கள், கிடங்கு மேலா​ளர்​கள் கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும். இந்​தப் புதிய மாற்​றத்​தின் மூலம் கடைகளில் விற்​பனை​யா​காமல் தேங்​கிக் கிடக்​கும் மது​பானங்​களின் அளவு பெரு​மளவு குறை​யும். அதே​நேரத்​தில் அதிக தேவை​யும், வரவேற்​பும் கொண்ட பிரபல மது பிராண்​டு​கள் தடை​யின்றி வாடிக்​கை​யாளர்​களுக்கு தாராள​மாக கிடைக்​கப் பெறும். எனவே, மது​பானங்​களை டாஸ்​மாக் கடைகளுக்கு அனுப்​பும் புதிய நடை​முறையை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும்​. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் வாடிக்கையாளர் கேட்கும் மது வகை அதிக அளவில் விநியோகம்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in