தமிழக முதல்வரை கொச்சையாக விமர்சனம் செய்வதா? - உதயநிதிக்கு தமிழிசை கடும் கண்டனம்

தமிழக முதல்வரை கொச்சையாக விமர்சனம் செய்வதா? - உதயநிதிக்கு தமிழிசை கடும் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: முதல்வரை கொச்சையாக விமர்சனம் செய்வதா என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்' வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துகள் கவலை அளிப்பதாக உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழகத்துக்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல், கேட்கவே கூசும் அளவுக்கு கொச்சையான வார்த்தைகளால் தமிழக முதல்வரை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளை பேசியிருப்பது, கட்சி எல்லைகளை கடந்து அனைவராலும் கண்டிக்கத்தக்கதாகும்.

எவ்வளவு மாற்றுக்கருத்து கள், மாற்று சிந்தனைகள் இருந்தாலும், விமர்சிக்கும் போது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால், அது அறிவாலயம் திமுகவுக்கு நல்லதல்ல. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.

அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரிகத்தையும் கடைபிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரிகம். மோசமாக விமர்சனம் செய்துவிட்டு, சிறையில் இருப்பதையும், ஊழல் செய்து விட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும் இவர்களிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

தமிழக முதல்வரை கொச்சையாக விமர்சனம் செய்வதா? - உதயநிதிக்கு தமிழிசை கடும் கண்டனம்
வேளாண் பட்ஜெட்டோடு திருப்பதி சென்றால் பாவம் போய்விடுமா? - தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in