தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு சரியானது அல்ல: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு சரியானது அல்ல: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
Updated on
1 min read

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம், மீஞ்​சூர் அருகே மேலூரில் உள்ள திரு​வுடை​யம்​மன் கோயி​லில், சித்ரா பெளர்​ணமியை முன்​னிட்டு நேற்று தெலங்​கா​னா​வின் முன்​னாள் ஆளுநரும், தமிழக பாஜக​வின் முன்​னாள் தலை​வரு​மான தமிழிசை சவுந்​தர​ராஜன் சுவாமி தரிசனம் செய்​தார்.

அப்​போது, அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்துக் கணிப்​பு​கள் அனைத்​தும் சரி​யானவை அல்ல. 4-ம் தேதி தேர்​தல் முடிவு​கள் வரும் வரை காத்​திருக்க வேண்​டும்.

உலக அளவில் போர் நடந்து கொண்​டிருக்​கும் வேளை​யில், பல நாடு​களில் பெட்​ரோல், டீசல் விலை பன்​மடங்கு உயர்ந்​துள்​ளது. ஆனால், இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்​டர் விலை உயர​வில்​லை.

பெட்​ரோல், டீசல் விலை உயராமல் இருப்​ப​தற்கு காரணம், பிரதமர் மோடி​யின் நிர்​வாகத் திறமை​தான். வர்த்தக ரீதியி​லான சமையல் காஸ் சிலிண்​டர் விலை உயர்வு என்​பது தற்​காலிக​மான மாற்​றம் மட்​டுமே என்றார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு சரியானது அல்ல: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதற்காக அமலாக்கத்துறையும் வழக்கு பதிய கட்டாயமில்லை: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in