

சென்னை: தமாகா மூத்த தலைவர் தமிழருவி மணியன் மனைவி பிரேமகுமாரி உடல்நலக் குறைவால் காலமானார். தமிழருவி மணியனின் மனைவி பிரேமகுமாரி (71), உடல்நலக் குறைவால், வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பிரேமகுமாரி நேற்று காலை காலமானார். இதுபற்றி தகவல் அறிந்ததும், தமிழருவி மணியனின் நெருங்கிய நண்பரும், இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனருமான பாரிவேந்தர், மருத்துவமனைக்கு சென்று பிரேமகுமாரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, பிரேமகுமாரி உடல் நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இன்று காலை அஞ்சலி செலுத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து, அரும்பாக்கம் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.