‘தமிழ்நாடு தலைகுனியாது’ - 20 நட்சத்திர பேச்சாளர்களுடன் பிப்.1 முதல் திமுக பிரச்சாரம்

‘தமிழ்நாடு தலைகுனியாது’ - 
20 நட்சத்திர பேச்சாளர்களுடன்  
பிப்.1 முதல் திமுக பிரச்சாரம்
Updated on
4 min read

சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக திமுக அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்த பரப்புரையின் கீழ், கட்சித் தலைவர் ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பிப்.1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, திருப்போரூர்- சபாபதி மோகன், ராயபுரம்- திண்டுக்கல் ஐ. லியோனி, கோயம்புத்தூர் தெற்கு- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நிலக்கோட்டை-பொன்.முத்துராமலிங்கம், கிருஷ்ணராயபுரம்- ஏ.கே.எஸ்.விஜயன், திருவள்ளூர்- இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., சாத்தூர்- மனோஜ் பாண்டியன்.

பிப்.2 (திங்கட்கிழமை) அன்று, தாராபுரம்- அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., ஜோலார்பேட்டை- சபாபதி மோகன், செங்கல்பட்டு- திண்டுக்கல் ஐ.லியோனி, கிணத்துக்கடவு- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நத்தம்- பொன்.முத்துராமலிங்கம், ஓமலூர்- கோவி.செழியன், குளித்தலை- ஏ.கே.எஸ்.விஜயன், ஆயிரம் விளக்கு- எம்.எம்.அப்துல்லா, பூவிருந்தவல்லி- இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., விழுப்புரம்- எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., விளாத்திக்குளம்- மனோஜ் பாண்டியன்.

பிப்.3 (செவ்வாய்க்கிழமை) அன்று, காங்கேயம்- அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., பாலக்கோடு- சபாபதி மோகன், ஏற்காடு- திண்டுக்கல் ஐ.லியோனி, திட்டக்குடி- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், புதுக்கோட்டை- பொன்.முத்துராமலிங்கம், மயிலாப்பூர்- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., மதுராந்தகம்- தயாநிதி மாறன், எம்.பி., சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி- எம்.எம்.அப்துல்லா, செஞ்சி- பழனிவேல் தியாகராஜன், திரு.வி.க. நகர்- இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ., பல்லாவரம்- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ., திருச்செந்தூர்- மனோஜ் பாண்டியன்.

பிப்.4 (புதன்கிழமை) அன்று, பவானிசாகர்- அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., கும்மிடிப்பூண்டி- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., கீழ்ப்பெண்ணாத்தூர்- சபாபதி மோகன், உதகமண்டலம்- திண்டுக்கல் ஐ.லியோனி, அறந்தாங்கி- பொன்.முத்துராமலிங்கம், வேளச்சேரி- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., திருக்கோயிலூர்- தயாநிதிமாறன், எம்.பி., திருவைகுண்டம்- மனோஜ் பாண்டியன்,

பிப்.5 (வியாழக்கிழமை) அன்று, மேட்டுப்பாளையம்- அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., திருத்தணி- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., ஆரணி- சபாபதி மோகன், திருவரங்கம்- திண்டுக்கல் ஐ. லியோனி, ஒரத்தநாடு- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், திருப்பத்தூர் (சிவகங்கை)- பொன். முத்துராமலிங்கம், சேலம் மேற்கு- தயாநிதி மாறன், எம்.பி., ராஜபாளையம்- ஏ.கே.எஸ்.விஜயன், மதுரவாயல்- கனிமொழி என்.வி.என்.சோமு, எம்.பி., விருத்தாசலம்- இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ.,

பிப்.6 (வெள்ளிக்கிழமை) அன்று, அவிநாசி- அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., திருப்பெரும்புதூர்- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., திண்டிவனம்- சபாபதி மோகன், மண்ணச்சநல்லூர்- திண்டுக்கல் ஐ.லியோனி, பேராவூரணி- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவகங்கை- பொன். முத்துராமலிங்கம், சேலம் வடக்கு- தயாநிதி மாறன், எம்.பி., சிவகாசி- ஏ.கே.எஸ்.விஜயன், ஆவடி- கலாநிதி வீராசாமி, எம்.பி., அம்பத்தூர்- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., குறிஞ்சிப்பாடி- இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ.,

பிப்.9 (திங்கட்கிழமை) அன்று, திருப்பூர் தெற்கு- அந்தியூர்.ப.செல்வராஜ், எம்.பி., வானூர்- சபாபதி மோகன், பெரம்பலூர்- திண்டுக்கல் ஐ.லியோனி, ஆலங்குடி- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மானாமதுரை- பொன்.முத்துராமலிங்கம், பரமக்குடி- ஏ.கே.எஸ்.விஜயன், பர்கூர்- கலாநிதி வீராசாமி, எம்.பி.,

பிப்.10 (செவ்வாய்க்கிழமை) அன்று, காரைக்குடி- திருச்சி சிவா, எம்.பி., பல்லடம்- அந்தியூர் ப. செல்வராஜ், எம்.பி., விக்கிரவாண்டி- சபாபதி மோகன், குன்னம்- திண்டுக்கல் ஐ.லியோனி, மேலூர்- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், போடிநாயக்கனூர்- பொன்.முத்துராமலிங்கம், ஒட்டப்பிடாரம்- ஏ.கே.எஸ். விஜயன், திருவண்ணாமலை- கலாநிதி வீராசாமி, எம்.பி .

பிப்.11 (புதன்கிழமை) அன்று, திருமங்கலம்- திருச்சி சிவா, எம்.பி., சூலூர்- அந்தியூர் ப. செல்வராஜ், எம்.பி., ஆத்தூர்- சபாபதி மோகன், திருவில்லிபுத்தூர்- திண்டுக்கல் ஐ.லியோனி, மதுரை கிழக்கு- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், திருச்சுழி- பொன்.முத்துராமலிங்கம், சங்கரன்கோவில்- ஏ.கே.எஸ்.விஜயன், ராணிப்பேட்டை- கலாநிதி வீராசாமி, எம்.பி., பரமத்தி வேலூர்- கார்த்திகேய சிவசேனாபதி, மயிலாடுதுறை- இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ., ஆலங்குளம்- மனோஜ் பாண்டியன்.

பிப்.12 (வியாழக்கிழமை) அன்று, விராலிமலை- திருச்சி சிவா, எம்.பி., வால்பாறை- அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., எடப்பாடி- சபாபதி மோகன், விளவன்கோடு- திண்டுக்கல் ஐ.லியோனி, சீர்காழி- கோவி.செழியன், அருப்புக்கோட்டை- ஏ.கே.எஸ்.விஜயன், குமாரபாளையம்- கார்த்திகேய சிவசேனாபதி, மதுரை மத்திய- பழனிவேல் தியாகராஜன், ராதாபுரம்- மனோஜ் பாண்டியன்.

பிப்.13 (வெள்ளிக்கிழமை) அன்று, ஆண்டிப்பட்டி- திருச்சி சிவா, எம்.பி., உடுமலைப்பேட்டை- அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., தருமபுரி- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., அரியலூர்- சபாபதி மோகன், மதுரை தெற்கு- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தென்காசி- ஏ.கே.எஸ்.விஜயன், நாகர்கோவில்- மனோஜ் பாண்டியன்.

பிப்.14 (சனிக்கிழமை) அன்று, பெரியகுளம்- திருச்சி சிவா, எம்.பி., வேடசந்தூர்- அந்தியூர் ப. செல்வராஜ், எம்.பி., பாப்பிரெட்டிப்பட்டி- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., ஜெயங்கொண்டம்- சபாபதி மோகன், திருநெல்வேலி- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், எழும்பூர்- தயாநிதி மாறன், எம்.பி., மதுரை மேற்கு- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி.,

பிப்.16 (திங்கட்கிழமை) அன்று, கம்பம்- திருச்சி சிவா, எம்.பி., சங்ககிரி- அந்தியூர் பி. செல்வராஜ், எம்.பி., மயிலம்- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., பண்ரூட்டி- சபாபதி மோகன், அம்பாசமுத்திரம்- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், காட்டுமன்னார்கோவில்- கோவி.செழியன், ஆத்தூர்- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., விருகம்பாக்கம்- தயாநிதி மாறன், எம்.பி., பொன்னேரி- கலாநிதி வீராசாமி, எம்.பி., துறைமுகம்- எம்.எம்.அப்துல்லா, திருவாரூர்- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., ஈரோடு மேற்கு- கார்த்திகேய சிவசேனாபதி, வேலூர்- பழனிவேல் தியாகராஜன், உத்திரமேரூர்- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ., டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

பிப்.17 (செவ்வாய்க்கிழமை) அன்று, மேட்டூர்- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., திருவிடைமருதூர்- சபாபதி மோகன், கடலூர்- கோவி.செழியன், சோழவந்தான்- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., கரூர்- தயாநிதி மாறன், எம்.பி., கந்தர்வக்கோட்டை- ஏ.கே.எஸ்.விஜயன், கவுண்டம்பாளையம்- கலாநிதி வீராசாமி, எம்.பி., வாணியம்பாடி- எம்.எம்.அப்துல்லா, அண்ணா நகர்- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., மொடக்குறிச்சி- கார்த்திகேய சிவசேனாபதி, அணைக்கட்டு- பழனிவேல் தியாகராஜன், குளச்சல்- இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ., காஞ்சிபுரம்- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ.,

பிப்.18 (புதன்கிழமை) அன்று, திருமயம்- திருச்சி சிவா, எம்.பி., வீரபாண்டி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., சிதம்பரம்- திண்டுக்கல் ஐ.லியோனி, செய்யூர்- கோவி.செழியன், ஆம்பூர்- எம்.எம்.அப்துல்லா, பெருந்துறை- கார்த்திகேய சிவசேனாபதி, பத்மநாபபுரம்- இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ., கலசப்பாக்கம்- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ., நாகப்பட்டினம்- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

பிப்.19 (வியாழக்கிழமை) அன்று, நெய்வேலி- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., அரக்கோணம்- கோவி.செழியன், செய்யாறு- கலாநிதி வீராசாமி, எம்.பி., ஆலந்தூர்- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., அந்தியூர்- கார்த்திகேய சிவசேனாபதி, திருப்பத்தூர்- பழனிவேல் தியாகராஜன், ரிஷிவந்தியம்- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ., வேதாரண்யம்- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

பிப்.20 (வெள்ளிக்கிழமை) அன்று, புவனகிரி- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., ஊத்தங்கரை- கோவி.செழியன், கொளத்தூர்- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., கோபிசெட்டிபாளையம்- தயாநிதி மாறன், எம்.பி., வாசுதேவநல்லூர்- ஏ.கே.எஸ்.விஜயன், குன்னூர்- எம்.எம்.அப்துல்லா, மாதவரம்- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., திருப்பூர் வடக்கு- கார்த்திகேய சிவசேனாபதி, தியாகராயர் நகர்- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ., தூத்துக்குடி- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

பிப்.21 (சனிக்கிழமை) அன்று, உசிலம்பட்டி- திருச்சி சிவா, எம்.பி., தளி- கோவி.செழியன், சைதாப்பேட்டை- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., அரவக்குறிச்சி- எம்.எம்.அப்துல்லா, வில்லிவாக்கம்- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., கோயம்புத்தூர் வடக்கு- கார்த்திகேய சிவசேனாபதி, போளூர்- பழனிவேல் தியாகராஜன், நாங்குநேரி- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பிப்.23 (திங்கட்கிழமை) அன்று, மன்னார்குடி- திருச்சி சிவா, எம்.பி., சோழிங்கநல்லூர் எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி., அரூர்- கோவி.செழியன், முதுகுளத்தூர்- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., சேந்தமங்கலம்- தயாநிதி மாறன், எம்.பி., பெரம்பூர்- கலாநிதி வீராசாமி, எம்.பி., திருச்சிராப்பள்ளி கிழக்கு- எம்.எம்.அப்துல்லா, திருச்செங்கோடு- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., பொள்ளாச்சி- கார்த்திகேய சிவசேனாபதி, உளுந்தூர்பேட்டை- பழனிவேல் தியாகராஜன்.

பிப்.24 (செவ்வாய்க்கிழமை) அன்று, பாபநாசம்- திருச்சி சிவா, எம்.பி., சோளிங்கர்- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., கீழ்வைத்தியனான்குப்பம்- கோவி.செழியன், கோவில்பட்டி- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., கூடலூர்- தயாநிதி மாறன், எம்.பி., தாம்பரம்- கலாநிதி வீராசாமி, எம்.பி., திருவெறும்பூர்- எம்.எம்.அப்துல்லா, சிங்காநல்லூர்- கனிமொழி என்.வி.என்.சோமு, எம்.பி., மடத்துக்குளம்- கார்த்திகேய சிவசேனாபதி, சங்கராபுரம்- பழனிவேல் தியாகராஜன், திண்டுக்கல்- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ., கன்னியாகுமரி- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,

பிப்.25 (புதன்கிழமை) அன்று, திருவையாறு- திருச்சி சிவா, எம்.பி., ஆற்காடு- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., செங்கம்- கோவி.செழியன், திருப்பரங்குன்றம்- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., காட்பாடி- கலாநிதி வீராசாமி, எம்.பி., குடியாத்தம்- எம்.எம். அப்துல்லா லால்குடி- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., தொண்டாமுத்தூர்- கார்த்திகேய சிவசேனாபதி, கிள்ளியூர்- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

பிப்.26 (வியாழக்கிழமை) அன்று, தஞ்சாவூர்- திருச்சி சிவா, எம்.பி., கிருஷ்ணகிரி- எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., வந்தவாசி- கோவி.செழியன், விருதுநகர்- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., திருத்துறைப்பூண்டி- தயாநிதி மாறன், எம்.பி., கீழ்வேளூர்- எம்.எம்.அப்துல்லா, முசிறி- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., ஒட்டன்சத்திரம்- கார்த்திகேய சிவசேனாபதி, சேலம் தெற்கு- பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ.,

பிப்.27 (வெள்ளிக்கிழமை) அன்று, பட்டுக்கோட்டை- திருச்சி சிவா, எம்.பி., பென்னாகரம்- எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி., கள்ளக்குறிச்சி- கோவி.செழியன், ராமநாதபுரம்- தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., நன்னிலம்- தயாநிதி மாறன், எம்.பி., வேப்பனஹள்ளி- கலாநிதி வீராசாமி, எம்.பி., கடையநல்லூர்- எம்.எம்.அப்துல்லா, துறையூர்- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., ராசிபுரம்- கார்த்திகேய சிவசேனாபதி, ஈரோடு கிழக்கு- பழனிவேல் தியாகராஜன், மணப்பாறை- எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., பூம்புகார்- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

பிப்.28 (சனிக்கிழமை) அன்று, கெங்கவல்லி- கோவி.செழியன், திருவாடனை- தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., கும்பகோணம்- தயாநிதி மாறன், எம்.பி., ஓசூர்- கலாநிதி வீராசாமி, எம்.பி., பாளையங்கோட்டை- எம்.எம்.அப்துல்லா, பழனி- கனிமொழி என்.வி.என். சோமு, எம்.பி., நாமக்கல்- கார்த்திகேய சிவசேனாபதி, பவானி- பழனிவேல் தியாகராஜன், திருச்சிராப்பள்ளி மேற்கு- எழிலன் நாகநாதன், எம்.எல்.ஏ., திருவொற்றியூர்- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

‘தமிழ்நாடு தலைகுனியாது’ - 
20 நட்சத்திர பேச்சாளர்களுடன்  
பிப்.1 முதல் திமுக பிரச்சாரம்
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in