திமுக சார்பில் பிப்.20 முதல் விருப்ப மனு!

திமுக சார்பில் பிப்.20 முதல் விருப்ப மனு!
Updated on
1 min read

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் தருவதற்கான தேதி விவரங்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2026 தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 20-02-2026 வெள்ளிக்கிழமை முதல் 02-03-2026 திங்கட்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.

தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ..1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்’ எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் பிப்.20 முதல் விருப்ப மனு!
மாநிலங்களவைத் தேர்தல் ‘கணக்கு’ - நெருக்கடியில் அதிமுக... சிக்கலில் திமுக!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in