தாராபுரம் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு: தமிழ்நாடு கள் இயக்கம் தகவல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ​கா​விரி பிரச்​சனைக்கு தீர்​வு, கள் தடை நீக்​கம் ஆகிய வற்றை முன்​னிறுத்தி தாராபுரம் இடைத்​தேர்​தலில் வேட்​பாளர் நிறுத்​தவுள்​ள​தாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பின் செய​லா​ள​ரும் தமிழ்​நாடு கள் இயக்க ஒருங்​கிணைப்​பாள​ரு​மான செ.நல்​ல​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறியதாவது: கள்​ளக்குறிச்சி கள்​ளச்​சாரய மரணங்​கள் தொடர்​பான நீதிபதி கோகுல்தாஸ் கமிட்டி அறிக்​கை​யில், கள் தடையை நீக்க வேண்​டும். அது ஒரு இயற்​கை​யான பாணம்.தடையை நீக்​கி​னால் இந்த கள்​ளச்​சா​ராயசாவு​களை வெகு​வாக குறைக்கமுடி​யும் என அரசுக்கு பரிந்​துரைக்கப்பட்டுள்ளது.

இதை நாங்​கள் வரவேற்​கின்​றோம். அரசு கள்​ளுக்கு தடையை நீக்கி அறிவிக்க வேண்​டும். அரசு இதை ஏற்க மறுத்​தால் எங்​களு​டைய போராட்​டம் தீவிரப்​படுத்தப்​படும். மேலும் கள் போதைபொருள் என்​பதை நிருபித்​தால் ரூ.10 கோடி பரிசு தரப்படும்.

காவிரி நதிநீர் பிரச்​சனைக்கு தீர்வு காண வேண்​டும். கள் இறக்க விதிக்​கப்​பட்​டுள்ள தடையை நீக்க வேண்​டும் என்​பதை முன்​னிறுத்தி தாராபுரத்​தில் வேட்​பாளரை நிறுத்த உள்​ளோம். காவிரி நதிநீர் பிரச்​சினை​யில் தினந்​தோறும் நீர் பங்​கீடு என்ற இலக்கை முன்​னிறுத்தி தமிழக அரசு மீண்​டும் ஒரு மறுசீ​ராய்வு குழுவை அமைத்து காவிரி நதிநீர் மன்​றத்​தில் வழக்கு தொடர வேண்​டும். பட்​டினப்​பாக்​கத்​தில் ரூ.1,200 கோடி​யில் புதிய தலைமை செயல​கம் அவசி​யமா என அரசு சிந்​தித்து அதை தள்ளி போட வேண்​டும் அல்​லது கைவிட வேண்​டும்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் - சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in