“தமிழகத்தில் லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறது” - அமைச்சர் ஷாஜகான்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

தஞ்சாவூர்: தமிழகத்தில் லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், அம்மாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஆட்சி சரியில்லாத ஒரு ஆட்சியாக இருந்தது. இப்போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும் என மிகத் தெளிவாக அறிவித்து இடைத்தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் சார்பில் மதுராந்தகத்தில் போட்டியிடக் கூடிய மரகதம் குமரவேல், தாராபுரத்தில் போட்டியிடுகின்ற சத்தியபாமா ஆகியோரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் குழுக்கள் அமைத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2 தொகுதிகளிலும் பிரச்சாரத்திற்காக சென்று வந்த நான் பொதுமக்களை சந்திக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி என்ற நம்பிக்கையில் மக்கள், அரசு மீது பேரன்பு கொண்டிருக்கிறார்கள். அதனால் இடைத்தேர்தலில் தவெகவின் 2 வேட்பாளர்களும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெறுவார்கள்” என்றார் அவர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“என் வாழ்நாளில் வேதனையான நிகழ்வு நடந்த நாள்” - முதல்வர் விஜய் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in