

சென்னை: ‘காலம் காலமாக இந்தித் திணிப்பை எதிர்த்து வரும் தமிழ்நாட்டில் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடர்வண்டித் துறையின் கோட்ட தலைமை அலுவலக நுழைவாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. காலம் காலமாக இந்தித் திணிப்பை எதிர்த்து வரும் தமிழ்நாட்டில் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு அலுவலகங்களுக்கு பெயர் சூட்டும்போது மாநில உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அந்த வகையில் திருச்சி கோட்ட தொடர்வண்டித் துறை தலைமை அலுவலக நுழைவாயிலுக்கு கடமை வாயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்தார்