

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 24-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, நாளை (ஜனவரி 21) அன்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதில் தொழிலதிபர் அருணாச்சலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டில், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பொன்னுசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
ஜனவரி 22-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும்.
ஜனவரி 23-ம் தேதி 2022 -2023 ஆம் ஆண்டுக்குரிய மிகை செலவுக்கான மானிய கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடரும். ஜனவரி 24-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.