

சென்னை: உயர் நீதிமன்ற பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிர்ப்பலி சம்பவம், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் உள்படபல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவரை இடைநீக்கம் செய்யவும், பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதையடுத்து வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் மோகன்தாஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அவரது இடைநீக்கத்தையும் ரத்து செய்ய பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட் டனர்.
அதன்பேரில், வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸின் இடைநீக்கத்தை ரத்து செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.