முக்கோணவியல் ஆய்வு நிலையங்கள் ஆவணங்களை 5 தொகுதிகளாக வெளியிட்டது நில அளவைத் துறை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் உள்ள பெரு முக்கோணவியல் நிலையங்கள் ஆவணப்படுத்தப்பட்டு 5 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நில அளவைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்தில் கர்னல் வில்லியம் லாம்டன் என்பவரால் புனித தோமையார் மலையில் 1802 ஏப்.10-ம் தேதி தொடங்கப்பட்டு 1871 வரை தியோடலைட் கருவிகளைப் பயன்படுத்தி ‘இந்தியாவின் பெரு முக்கோணவியல் ஆய்வு’ மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் பெரு முக்கோணவியல் ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவை இந்திய நில அளவைத் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தமிழகத்தில் உள்ள இந்த ஆய்வு நிலையங்களை முறையாகக் கண்டறிந்து, அவற்றை நில அளவை செய்து வரைபடமிடுதல், ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது.

எதிர்கால நவீன நிலஅளவைப் பணிகளுக்கு உதவுவது இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.

அதன்படி, ‘தமிழகத்தில் உள்ள பெரு முக்கோணவியல் ஆய்வு நிலையங்களின் ஆவணம்’ அரசின் அனுமதியுடன், நில அளவை, நிலவரித் திட்ட இயக்குநரால் 5 தொகுதிகளாக வெளியிடப்பட்டு, அந்த நிலையங்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் நோக்கில், மாவட்ட ஆட்சியர்கள், நில அளவைத் துறை யின் மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மைல் கற்களில் இந்தி மொழியில் ஊர் பெயர்: கி.வீரமணி, வைகோ கண்டனம்

X