முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி: வரவேற்பும் விமர்சனமும்

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி: வரவேற்பும் விமர்சனமும்
Updated on
1 min read

சென்னை: விளிம்புநிலை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சிறப்பு நிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பும், அமமுக விமர்சனமும் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் அரசின் மாத ஓய்வூதிய உதவித் தொகைகளை பெற்று

வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு நிதி யாக ரூ.2 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் தமிழக அரசு வரவு வைத் துள்ளது வரவேற்கத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு சிறப்பு உதவியாக ரூ.2,000 வழங்கிய நிலையில், அரசின் உதவித்தொகைபெறும் மற்ற பிரிவினரிடமிருந்தும் இந்தக் கோரிக்கை எழுந்தது. நலிவுற்ற மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தற்போது தலா ரூ.2000 அரசின் சார்பில் வங்கிக் கணக்கில் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: முதியோர் உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சி நிறைவடையும் தறுவாயிலும் நிறைவேற்றாமல், தற்போது சிறப்பு நிதி எனும் பெயரில் ரூ.2000 வழங்கியிருப்பது ஏமாற்று வேலையாகும்.

5 ஆண்டுகாலமாக மக்களை வாட்டி வதைத்த திமுக அரசின் தேர்தல் கால சித்து விளையாட்டுகளை நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி: வரவேற்பும் விமர்சனமும்
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in