பழநி நில மோசடி வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது

முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸார் நடவடிக்கை
கொடைக்கானலில் கைது செய்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்.

கொடைக்கானலில் கைது செய்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்.

Updated on
1 min read

திண்டுக்கல்: பழநி கோயில் நில மோசடி வழக்​கில் தொடர்​புடைய சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன் நேற்று மாலை கைது செய்​யப்​பட்​டார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அடி​வாரப் பகு​தி​யில் உள்ள தண்​ட​பாணி மடத்​துக்கு சொந்​த​மான ரூ100 கோடி மதிப்​பிலான நிலம், மோசடி​யாக ரூ.2 கோடிக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

11 பேர் மீது வழக்குப்பதிவு: இதுதொடர்​பாக சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், மடத்​தின் நிர்​வாகி முரு​க​தாஸ், நிலத்தை வாங்​கிய திருப்​பூர் மாவட்​டம் பாப்​பன்​குளத்​தைச் சேர்ந்த வெள்​ளத்​துரை, பழநி அருகே புதூரைச் சேர்ந்த சேதுப​தி, பத்​திரம் தயாரித்​துக் கொடுத்த வழக்​கறிஞர் அன்​வர்​தீன், இடைத்​தரக​ராக செயல்​பட்ட ஒட்​டன்​சத்​திரத்​தைச் சேர்ந்தஜெயபிர​காஷ் உட்பட 11 பேர் மீது திண்​டுக்​கல் சிபிசிஐடி போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கில் சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் முன்​ஜாமீன் பெற்று திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​தில் தின​மும் விசா​ரணைக்கு ஆஜராகி வந்​தார். இந்​நிலை​யில் அவரது முன்​ஜாமீனை நேற்று முன்​தினம் உயர்​ நீ​தி​மன்​றம் ரத்து செய்து உத்​தர​விட்​டது.

கொடைக்கானலில் பதுங்கல்: இதையடுத்து ஜஸ்​டின் மணி​கண்​டனை கைது செய்ய சிபிசிஐடி போலீ​ஸார் தேடிவந்​தனர். இந்​நிலை​யில் அவர் கொடைக்​கானலில் பதுக்​கி​யிருப்​பதாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. அங்கு சென்ற சிபிசிஐடி போலீ​ஸார் தலைமறை​வாக இருந்த ஐஸ்​டின் மணி​கண்​டனை கைது செய்து நேற்று மாலை திண்​டுக்​கல் அழைத்​து​வந்​தனர்.

திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​தில் அவரிடம் விசா​ரணை நடத்​திய போலீ​ஸார், பின்​னர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய இடைத்​தரகர் ஜெயப்​பிர​காஷ் வெளி​மாநிலத்​தில் தலைமறை​வாக இருப்​ப​தாக தெரிய​வந்​துள்​ளது. அவரது இருப்​பிடம் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

ஒட்​டன்​சத்​திரத்​தில் உள்ள ஜெயப்​பிர​காஷ் வீட்​டில் நேற்று சிபிசிஐடி போலீ​ஸார் சோதனை மேற்​கொண்​டனர். அவரது மனைவி செண்​பகம​தி​யிடம், கணவரிடம் இருப்​பிடம் குறித்து விசா​ரணை நடத்​தினர்.

<div class="paragraphs"><p>கொடைக்கானலில் கைது செய்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்.</p></div>
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in