தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டும்: பழனிசாமி

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி

Updated on
1 min read

சென்னை: ‘ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல் துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு சட்டம் - ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் - ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami
மே 20-ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in