

முதல்வர் ஸ்டாலின்
நாகர்கோவில்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி மாலை நாகர்கோவில் வருகிறார். அன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளிவிழா அலங்கார வளைவை முதல்வர் திறந்துவைக்கிறார்.
தொடர்ந்து, புத்தளம் கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம், கருணாநிதி சிலை ஆகியவற்றை திறந்துவைக்கிறார். பின்னர், நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் வெண்கல சிலையையும் முதல்வர் திறந்துவைக்கிறார்.
அன்று இரவு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், அடுத்த நாள் (பிப். 25) காலை கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.