

திண்டுக்கல்லில் திமுக சார்பில் நேற்று திராவிட பொங்கல் விழா கட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே அரசு திமுகதான். அரசியலில் ஓய்வு இல்லை. நான் ஓய்வு பெறுவேன் என கனவு காணாதீர்கள். எங்கள் தலைவர் கருணாநிதி 94 வயது வரை அரசியலில் கோலோச்சினார் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. நமது முதல்வர் 100 வயது வரை தமிழகத்தில் ஆட்சிபுரிவார்.