மக்கள் மனதை புண்படுத்தாத அரசியல் செய்தால் அரசு நீடிக்கும்: தவெகவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவுரை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்
Updated on
1 min read

சிவகாசி: மக்​கள் மனதை புண்​படுத்தாமல் அரசி​யல் செய்​தால் தவெக அரசு நீடிக்​கும் என ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் அறிவுரை வழங்கியுள்ளார்.

திமுக, தவெக இந்து விரோத போக்கை கைவிட வலி​யுறுத்தி சிவ​காசி​யில் நடந்த கண்டன ஆர்ப்​பாட்டத்தில் ​வில்​லிபுத்​தூர் மணவாள மாமுனிகள் மடத்​தின் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் பேசிய​தாவது: அரசி​யல் வேறு, மதங்​கள் வேறு என்​பதை புரிந்து மக்​கள் மனது புண்​படும்​படி​யாக யாரும் நடந்து கொள்​ளக் கூடாது என்ற கோரிக்​கையை முதல்​வர் விஜய்க்கு முன் வைக்​கிறோம்.

சனாதன எதிர்ப்பு பேச்சை கண்​டித்து இந்​தியா முழு​வதும் இன்று வெகுண்டு எழுந்​துள்​ளதற்​குக் காரணம் அரசி​யல்​வா​தி​களும், அரசி​யல் கட்​சிகளும்​தான். மக்​களின் மனது புண்​படும்​படி பேசி​விட்​டு, மக்​களிடையே விரோதத்​தன்​மையை வளர்த்​தது தமிழக அரசி​யல் கட்​சிகள்​தான்.

தற்​போதைய தமிழக அரசு எந்த ஒரு மதத்​தை​யும், எந்​தக் கடவுளை​யும் இழி​வாகப் பேச அனு​ம​திக்​கக் கூடாது. மக்​களிடையே பிரச்​சனை இன்​றி, மக்​களின் மனதைப் புண்​படுத்​தாமல் அரசி​யல் செய்​தால் தவெக அரசு நீடிக்​கும். தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்ற ஆண்​டாள் தா​யாரிடம் பிரார்த்​தனை செய்​கிறோம். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர்
மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in