கச்சத்தீவு குறித்த உச்ச நீதிமன்ற கருத்து: இலங்கை அமைச்சர் வரவேற்பு

ராமலிங்கம் சந்திரசேகர்

ராமலிங்கம் சந்திரசேகர்

Updated on: 
1 min read

ராமேசுவரம்: கச்சத்தீவு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தை இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதை தவிர்க்குமாறு தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது.

இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீன்பிடி படகுகளின் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கடல் வளங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.

சர்வதேச கடல் எல்லையை மதிப்பதும், கடல் வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமானதாகும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன் கடல் வளங்களையும் பாதுகாக்கும் வகையில், இரு நாடுகளின் மீனவர்களிடையே பேச்சுவார்த்தையின் மூலம், நீடித்த தீர்வுகளை நோக்கி முன்னேறுவது முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>ராமலிங்கம் சந்திரசேகர்</p></div>
மனைவியை துன்புறுத்திய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in