ஜனவரி 23-ம் தேதி பிரதமர் தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் எஸ்பிஜி ஆய்வு கூட்டம்

ஜனவரி 23-ம் தேதி பிரதமர் தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் எஸ்பிஜி ஆய்வு கூட்டம்
Updated on
1 min read

சென்னை: மது​ராந்​தகம் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்க இருப்​ப​தால், டெல்​லியி​லிருந்து வந்த எஸ்​பிஜி குழு​வினர் சென்னை விமான நிலை​யத்​தில் ஆய்​வுக்​கூட்​டம் நடத்​தினர்.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் வரும் 23-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதில் பிரதமர் நரேந்​திரமோடி உரை​யாற்​றவுள்​ளார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​கள் பங்​கேற்​க​வுள்​ளனர்.

இதற்​காக பிரதமர் திரு​வனந்​த​புரத்​தில் இருந்து வரும் 23-ம் தேதி பகல் 1.15 மணிக்கு தனி விமானத்​தில் புறப்​பட்​டு, நண்​பகல் 2.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் வரு​கிறார். அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் பகல் 2.25 மணிக்கு புறப்​பட்​டு, மாலை 3 மணிக்கு மது​ராந்​தகம் பொதுக்​கூட்ட திடலுக்கு செல்​கிறார்.

மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கும் பிரதமர் மாலை 4.30 மணிக்கு அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் புறப்​பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலை​யம் வரு​கிறார்.

அங்​கிருந்து மாலை 5.05 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்​லிக்கு புறப்​படு​கிறார். பிரதமரின் வரு​கையை ஒட்டி டெல்​லி​யில் இருந்து சிறப்பு பாது​காப்​புப் படை (எஸ்​பிஜி) ஏஐஜி அமி சந்த் யாதவ் தலை​மையி​லான குழு​வினர் சென்னை விமான நிலை​யம் வந்​துள்​ளனர்.

நேற்று அந்த குழு​வினர், விமான நிலை​யத்​தில் பிரதமரின் பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து ஆய்​வுக் கூட்​டத்தை நடத்​தினர். அந்த கூட்​டத்​தில் சென்னை மாநகர போலீஸ், மத்​திய தொழில் பாது​காப்​புப் படை, மாவட்ட வரு​வாய்துறை, சென்னை விமான நிலைய உயர் அதி​காரி​கள், மத்​திய, மாநில உளவுப் பிரி​வினர், முக்​கிய பிர​முகரின் பாது​காப்பு அதி​காரி​கள், மருத்​து​வம் மற்​றும் தீயணைப்​புத் துறை அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

அப்​போது பிரதமரின் தனி விமானம் வந்து நிற்​கும் பகு​தி, மது​ராந்​தகம் செல்ல பயன்​படுத்​தப்​படும் ஹெலி​காப்​டர் நிற்​கும் பகு​தி​யில் எந்​தெந்த அதி​காரி​கள் கண்​காணிப்​புப் பணி​களில் ஈடுபட வேண்​டும் என்​பது குறித்து குழு​வினர் ஆய்வு மேற்​கொண்​டனர். பிரதமர் வரு​வதையொட்​டி, 23-ம் தேதி வரை சென்னை விமான நிலை​யம் முழு பாது​காப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

அந்த குழு​வினர் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகம் சென்​று, அங்கு பொதுக்​கூட்​டம் நடக்​கும் பகு​தி, பிரதமரின் ஹெலி​காப்​டர் வந்து இறங்​கும் இடம் ஆகிய​வற்​றை​யும் ஆய்வு செய்​ய​வுள்​ளனர்.

ஜனவரி 23-ம் தேதி பிரதமர் தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் எஸ்பிஜி ஆய்வு கூட்டம்
மாமல்லபுரத்தில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் தமிழ்நாடு சர்வதேச சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in