

சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே நவ.16-ம் தேதி முதல் ஜனவரி மாதம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூரில் இருந்து நவ.19 முதல் ஜன.21 வரை வியாழன்தோறும் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06117) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கத்தில் (06118) கொல்லத்தில் இருந்து நவ.20 முதல் ஜன.22 வரை வெள்ளிதோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் வரும்.
இதேபோல, எழும்பூரில் இருந்து நவ.21 முதல் ஜன.23 வரை சனிதோறும் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06121) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கத்தில் (06122) கொல்லத்தில் இருந்து நவ.22 முதல் ஜன.24 வரை ஞாயிறுதோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.18 முதல் ஜன.20 வரை புதன்தோறும் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கத்தில் (06120) கொல்லத்தில் இருந்து நவ.19 முதல் ஜன.21 வரை வியாழன்தோறும் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.
சென்ட்ரலில் இருந்து நவ.16 முதல் ஜன.25 வரை திங்கள்தோறும் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06083) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் செல்லும்.
மறுமார்க்கத்தில் (06084) கொல்லத்தில் இருந்து நவ.17 முதல் ஜன.26 வரை செவ்வாய்தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். இந்த சிறப்பு ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (நவ.7) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.