

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் இருந்து போத்தனூர், தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14-ம்தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.11-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் (06023) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து செப்.14-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (06024) புறப்பட்டு, மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
தாம்பரம் - தென்காசி:
தாம்பரத்தில் இருந்து செப்.11-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06089) புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு தென்காசியை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து செப்.14-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் (06090) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (செப்.10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.