ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்குகளில் வாதிட சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

ஜெம் வீரமணி | கோப்புப் படம் 

ஜெம் வீரமணி | கோப்புப் படம் 

Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்குகளில் ஆஜராகி வாதிட 3 சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவி்ட்டுள்ளது.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணிக்கு எதிராக 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன், வீரமணியின் உதவியாளர் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்குகளில் சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜராகி வாதிட சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக கே.ஆர்.சங்கரன், எம்.சந்தியா, சுவாமி சுப்பிரமணியன் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ஜெம் வீரமணி | கோப்புப் படம்&nbsp;</p></div>
புதுச்சேரியில் தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸார்

X