தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு? - தஞ்சாவூரில் 6 பேரின் வீடுகளில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் சோதனை

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் நேற்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் சோதனை நடத்திய வீடு.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் நேற்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் சோதனை நடத்திய வீடு.

Updated on: 
1 min read

தஞ்சாவூர்: தடை செய்​யப்​பட்ட இயக்​கத்​துடன் தொடர்பு உள்​ளதா என்​பது குறித்து தஞ்சாவூரில் 6 பேரின் வீடு​களில் சிறப்பு புல​னாய்​வுப் பிரி​வினர் நேற்று சோதனை நடத்​தினர்.

தஞ்​சாவூரில் இளைஞர்​களை மூளைச்​சலவை செய்து தடை செய்​யப்​பட்ட கிலாபத் இயக்​கத்​தில் சேர்ப்​ப​தாக சிறப்பு புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதன்​பேரில், தஞ்​சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் அனு​மதி பெற்​று, சிறப்பு புல​னாய்​வுப் பிரிவு டிஎஸ்பி சார்​லஸ் மேற்​பார்​வை​யில் நேற்று தஞ்​சாவூரில் 6 இடங்​களில் போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

தஞ்​சாவூர் கீழ​வாசல் எஸ்​என்​எம் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன், அவரது சகோதரர் அப்​துல், கீழ்​வாசல் டவுன் கரம்பை காவேரி நகரைச் சேர்ந்த உமர்​முக்​தர், அவரது சகோதரர் யாசல் அப்​துல், கீழ​வாசல் ராம​சாமிபேட்​டையைச் சேர்ந்த சம்​சுதீன், கீழ​வாசல் ரகு​மான் நகரைச் சேர்ந்த சேக்​பரீத் ஆகிய 6 பேரின் வீடு​களில் இந்த சோதனை நடை​பெற்​றது.

அப்​போது, தடை செய்​யப்​பட்ட இயக்​கம் மற்​றும் மதம் சார்ந்த 20-க்​கும் மேற்​பட்ட புத்​தகங்​கள், 5 செல்​போன்​கள், லேப்​டாப், பென்​டிரைவ்​களை போலீ​ஸார் கைப்​பற்​றிச் சென்​றனர்.

இந்​நிலை​யில், இஸ்​லாமிய இளைஞர்​களைச் சீர்​படுத்​தும் பணி​யிலும், சமூக சீர்​திருத்​தப் பணி​களி​லும், தாங்​கள் ஈடு​பட்​டு​வரும் நிலை​யில், இந்த சோதனை இஸ்​லாமியர்​கள் மீது தவறான பிம்​பத்தை ஏற்​படுத்​தும் வகை​யில் உள்​ள​தாக சோதனைக்கு உள்​ளான குடும்​பத்​தினர் குற்​றம்​சாட்​டி​னார்​.

<div class="paragraphs"><p>தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் நேற்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் சோதனை நடத்திய வீடு. </p></div>
பதிவுத் துறையில் பிழை திருத்தல் ஆவணத்துக்கான கட்டண விதியில் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in