வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மை, மண்வள பாதுகாப்புக்கு சிறப்பு கவனம்: அமைச்சர் வினோத்

வேளாண் துறை அமைச்சர் வினோத்

வேளாண் துறை அமைச்சர் வினோத்

Updated on
2 min read

சென்னை: வேளாண் பட்​ஜெட்​டில் நீர் மேலாண்​மை, மண்வள பாது​காப்​பு, வேளாண் பொருட்​களுக்கு நியாய​மான விலை கிடைப்​பது போன்​றவற்​றில் சிறப்பு கவனம் செலுத்​தப்​படும் என்று வேளாண் துறை அமைச்​சர் வினோத் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026-27-ம் நிதி ஆண்​டுக்​கான தவெக அரசின் முதலா​வது பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி​யும் வேளாண் பட்​ஜெட் 6-ம் தேதி​யும் சமர்ப்​பிக்​கப்பட உள்​ளன. இந்​நிலை​யில் வேளாண்மை மற்​றும் உழவர் நலத்​துறை சார்​பில் வேளாண் தனி பட்​ஜெட் குறித்த கருத்து கேட்​புக் கூட்​டம் சென்னை கோட்​டூர்​புரம் அண்ணா நூற்​றாண்டு நூலக கூட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

வேளாண் அமைச்​சர் வினோத் தலை​மை​யில் நடந்த இக்​கூட்​டத்​தில் கே.ஏ.செங்​கோட்​டையன், எஸ்​.ஆனந்த், வெங்​கட்​ரமணன் உட்பட 10-க்​கும் மேற்​பட்ட அமைச்​சர்​கள் கலந்​து​கொண்​டனர். கூட்​டத்​தில் வேளாண் அமைச்​சர் வினோத் தலை​மை​யுரை​யாற்றி பேசி​ய​தாவது: வேளாண் பட்​ஜெட் தயாரிப்​புக்கு முன்​பாக விவ​சா​யிகளின் கருத்​துகளை கேட்​டறி​யும் வகை​யில் ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடத்​து​மாறு முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​னார். அதன் அடிப்​படை​யில், இது​வரை மண்டல அளவில் 4 கருத்து கேட்​புக் கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன.

சென்னை நீங்​கலாக இதர 37 மாவட்​டங்​களைச் சேர்ந்த விவ​சா​யிகள் தெரி​வித்த கருத்​துகள் முதல்​வரின் கவனத்​துக்கு எடுத்​துச்​செல்​லப்​பட்​டுள்​ளது. அதன் தொடர்ச்​சி​யாக தற்​போது சென்​னை​யில் மாநில அளவில் கருத்து கேட்பு கூட்​டம் நடத்​தப்​படு​கிறது. விவ​சா​யிகள், விவ​சாய அமைப்​பினர், கால்​நடை வளர்ப்​போர் உட்பட பல்​வேறு தரப்​பினரின் கருத்​துகளை கேட்டு அதன் அடிப்​படை​யில் வேளாண் பட்​ஜெட் தயாரிக்​கப்பட இருக்​கிறது.

அதில் மண்வள மேம்​பாடு, நீர் மேலாண்​மை, வேளாண் சந்தை திட்​டங்​கள், பயிர் உற்​பத்​தித் திறன், வேளாண் பொருட்​களுக்கு விலை பாது​காப்​பு, நவீன வேளாண் தொழில்​நுட்​பங்​களை பரவலாக்​குதல், கால்​நடை பாது​காப்​பு, பால்​வளம், மீன்​வளம், வேளாண் தொழில்​கள் ஆகிய​வற்​றுக்கு சிறப்​புக் கவனம் செலுத்​தப்​படும்.

விவ​சா​யிகள் மீது தனி அக்​கறை கொண்ட தமிழக முதல்​வர், குறுவை சாகுபடியை ஊக்​குவிக்​கும் வகை​யில் ரூ.134.83 கோடி மதிப்​பிலான குறுவை சிறப்​புத் திட்​டங்​களை அறி​வித்​தார். கடும் நிதி நெருக்​கடி​யிலும் ஆட்​சிப் பொறுப்​பேற்ற 50 நாட்​களில் 14.43 லட்​சம் விவ​சா​யிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி மதிப்​பில் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்.

விவ​சா​யத்​தில் உற்​பத்​தியை அதி​கரிப்​பது மட்​டும் போதாது. விவ​சா​யிகளின் வரு​மான​மும் அதி​கரிக்க வேண்​டும். அதற்​காக மதிப்​புக்​கூட்​டு​வது, நேரடி சந்தை விற்​பனை போன்​றவற்​றி​லும் அதிக கவனம் செலுத்த வேண்​டி​யுள்​ளது. இந்த கருத்து கேட்​புக் கூட்​டம் ஒரு சம்​பிர​தாயக் கூட்​ட​மாக இருக்​காது. விவ​சா​யிகளின் கோரிக்​கைகளை பட்​ஜெட்​டில் இடம்​பெறச் செய்​யும் ஒரு மக்​கள் மேடை​யாக இருக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பேச்​சு​வார்த்தை வேண்​டாம்: கூட்​டத்​தில் பங்​கேற்ற தமிழ்​நாடு அனைத்து விவ​சாய சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழுத் தலை​வர் பி.ஆர்​.​பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “காவிரி ஆற்​றின் குறுக்கே அணை கட்​டும் கர்​நாடக அரசின் முயற்​சி​யைத் தடுக்க தமிழக அரசு சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும். காவிரி பிரச்​சினை தொடர்​பாக இரு மாநிலங்​களுக்கு இடையே இனி பேச்​சு​வார்த்தை கிடை​யாது என 2013-ம் ஆண்​டிலேயே உச்ச நீதி​மன்​றம் உறு​திப்​படுத்​தி​யது. எனவே தமிழக-கர்​நாடக முதல்​வர்​கள் பேச்​சு​வார்த்​தையை தொடரக்​கூ​டாது; சட்​டத்​தின்​படி அது செல்​லாது என்​ப​தை​யும் எடுத்​துரைத்​தோம்'' என்றார்.

<div class="paragraphs"><p>வேளாண் துறை அமைச்சர் வினோத்</p></div>
கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in