வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் வாக்காளர் பட்​டியல் சிறப்பு தீவிரத் திருத்​தத்​தின்கீழ், வாக்காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க, திருத்​து​வதற்​கான அவகாசம் ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது.

அதனால், வார விடு​முறை நாட்​களாக 24, 25 தேதி​களில் சென்​னை​யில் உள்ள 4,079 வாக்​குச்​சாவடி மையங்​களி​லும் வாக்காளர் பட்​டியல் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும்.

இதில் வரைவு வாக்காளர் பட்​டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், 18 வயது நிரம்​பிய தகு​தி​யுடையவர்கள் படிவம்​–6ஐ, உறு​தி​மொழி படிவத்​துடன் சமர்ப்​பித்து தங்​கள் பெயரை சேர்க்க விண்​ணப்​பிக்​கலாம்.

வாக்காளர் பட்​டியலில் ஏற்​க​னவே உள்ள பெயரை நீக்க கோர படிவம்–7, முகவரி மாற்​று​தல், வாக்காளர் பட்​டியலில் உள்ள பதிவு​களை திருத்​தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடை​யாள அட்டை மாற்​றம் செய்ய, மாற்​றுத் திற​னாளி வாக்காளர்கள் என குறிப்​பது ஆகியவற்றுக்கு படிவம்–8 மூலம் விண்​ணப்​பிக்​கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in