சென்னை வெள்ளத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்: சவுமியா அன்புமணி கோரிக்கை

சென்னை வெள்ளத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்: சவுமியா அன்புமணி கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: ‘சென்னை வெள்​ளத்தை தடுப்​ப​தற்​காக அமைக்​கப்​பட்ட ஐஏஎஸ் அதி​காரி திருப்​பு​கழ் குழு அறிக்​கையை வெளி​யிட வேண்​டும்’ என்று சட்​டப்​பேர​வை​யில் பாமக உறுப்​பினர் சவுமியா அன்​புமணி வலி​யுறுத்தி உள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று சுகா​தா​ரத்​துறை, வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடை​பெற்​றது.

அப்​போது பாமக உறுப்​பினர் சவுமியா அன்​புமணி பேசும்​போது, “2021 அக்​டோபர் மாதம் சென்​னை​யில் பெரும் மழை, வெள்​ளப் பாதிப்பு ஏற்​பட்​டது. அகதி​கள் போல் மக்​கள் பல்​வேறு இடங்​களில் தங்​கவைக்​கப்​பட்​டனர். அந்த வரலாறு திரும்​ப​வும் உரு​வாகக்​கூ​டாது.

அதற்​காக, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை வெள்​ளத்​தைத் தடுப்​ப​தற்​காக ஐஏஎஸ் அதி​காரி திருப்புகழ் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டது. 2023 மார்ச் மாதம் 600 பக்​கம் அறிக்​கையை அந்த குழு தாக்​கல் செய்​தது.

அந்த அறிக்​கை​யில் பல்​வேறு பரிந்​துரைகள் இடம்​பெற்​றிருக்​கும். 41 மாதங்​கள் ஆகி​யும் அந்த அறிக்கை வெளி​யிடப்​பட​வில்​லை. அதை பொது​மக்​கள் பார்​வைக்கு வெளி​யிட வேண்​டும்” என்​றார்.

இதற்​குப் பதிலளித்து வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் பேசும்​போது, “கடந்த ஆட்​சி​யில் திருப்​பு​கழ் குழு அறிக்கை வெளி​யிடப்​பட​வில்​லை.

தற்​போது பேரிடர் மேலாண்மை கூடு​தல் ஆணை​யர் தலை​மை​யில் 7 பேர் கொண்ட நிபுணர்​கள் குழுவை முதல்​வர் விஜய் அமைத்​துள்​ளார்.

15 நாள்​களுக்கு முன்பு அந்​தக் குழு கூடியது. பொதுப்​பணித்​துறை, மாநக​ராட்​சி, நெடுஞ்​சாலை, மின்​துறை என அனைத்​தும் ஒருங்​கிணைத்து பணி​களை மேற்​கொள்ள முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார்​” என்​றார்​.

சென்னை வெள்ளத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்: சவுமியா அன்புமணி கோரிக்கை
வீடுகளில் அதிக மின் கட்டண புகார்: 3.7 லட்சம் மின் இணைப்பில் 2 ஆயிரத்தில் மட்டுமே குளறுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in