தேவையான நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை தேவை: முதல்வருக்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு கடிதம்

தேவையான நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை தேவை: முதல்வருக்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு கடிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழக ரயில்வே திட்​டங்​களை நிறைவேற்ற, நிலத்தை கையகப்​படுத்​தித் தர நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று முதல்​வர் விஜய்க்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு கடிதம் அனுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து அக்​குழு​வின் உறுப்​பினர் ஜாபர் அலி அனுப்​பி​யுள்ள கடிதம்: நாட்​டில் வேக​மாக நகரமய​மாக்​கல் நடக்​கும் மாநிலங்​களில் ஒன்​றாக தமிழகம் உள்​ளது.

இதனால் போக்​கு​வரத்து கட்​டமைப்பு மிக​வும் அவசி​ய​மாகிறது. தமிழகத்​தில் ரூ.22,808 கோடி செல​வில், 1,700 கி.மீ. தொலை​வுக்கு 9 புதிய ரயில்​பாதை, 3 இரட்டை பாதை திட்​டங்​கள் உட்பட மொத்​தம் 15 ரயில் பாதை திட்​டங்​களை ரயில்வே செயல்​படுத்தி வரு​கிறது.

ஆனால் இந்த ரயில் திட்​டங்​களை நிறைவேற்​று​வ​தில், தமிழக அரசு சார்​பில் நிலம் கையகப்​படுத்​தித் தரு​வ​தில் தாமதம் ஏற்​படு​கிறது. தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு மொத்​தம் 4,326 ஹெக்​டேர் நிலம் தேவை​யாக உள்​ளது.

ஆனால் 3,274 ஹெக்​டேர் நிலம் இன்​னும் கையகப்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ளது. அதாவது 75 சதவீதம் நிலம் இன்​னும் கையகப்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ளது.

மத்​திய பட்​ஜெட்​டில் ஆண்​டு​தோறும் கணிச​மான அளவுக்கு நிதி ஒதுக்​கீடு செய்​யப்​படு​கிறது.

அந்த வகை​யில் நடப்பு நிதி​யாண்​டில், தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. இருப்​பினும் ரயில்வே திட்​டங்​களுக்​கு, நிலம் கையகப்​படுத்​து தலே முக்​கி​யத் தடை​யாக உள்​ளது.

குறிப்​பாக மதுரையி​லிருந்து அருப்​புக்​கோட்டை வழி​யாக தூத்​துக்​குடி, திண்​டிவனம் - செஞ்சி - திரு​வண்​ணா​மலை, சென்னை - புதுச்​சேரி - கடலுார், ஆவடி - பெரும்​புதுார் - கூடு​வாஞ்​சேரி, தஞ்​சாவூர் - பட்​டுக்​கோட்​டை, ராமேசுவரம்- தனுஷ்கோடி உள்​ளிட்ட பல்​வேறு ரயில் பாதை திட்​டங்​களில் பல ஆண்​டு​களாக தாமதம் ஏற்​பட்​டுள்​ளது.

எனவே ரயில்வே திட்​டங்​களை விரைந்து நிறைவேற்ற, மாநில அரசு போது​மான நிலங்​களை கையகப்​படுத்​தித் தர வேண்​டும்.

மேலும் தமிழகத்​தில் புதிய ரயில் திட்​டங்​களை விரைந்து செயல்​படுத்த, ரயில்வே துறை​யுடன், தமிழக அரசு ஒப்​பந்​தம் மேற்​கொண்டு பணி​களை விரைவுபடுத்​த வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

தேவையான நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை தேவை: முதல்வருக்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு கடிதம்
“வேட்பாளரல்ல; சின்னத்துக்குதான் மக்கள் வாக்களிக்கின்றனர்” - சவுமியா அன்புமணி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in