அடுத்த நிதியாண்டில் 6 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை: தெற்கு ரயில்வே

அடுத்த நிதியாண்டில் 6 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை: தெற்கு ரயில்வே
Updated on
1 min read

சென்னை: அடுத்த நிதி​யாண்​டில், சென்னை எழும்​பூர் - விழுப்​புரம் உட்பட 6 வழித்தடங்​களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்​தில் ரயில்​களை இயக்க பணி​கள் மேற்​கொள்​ளப்​படும் என்​று, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் உள்ள முக்​கிய வழித்​தடங்​களில், ரயில்​களின் வேகத்தை அதி​கரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. இதற்​காக, கூடு​தல் பாதை அமைப்​பது, வளைவு​களை அகற்​று​வது, சிக்​னல் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்​து​வது உட்பட பல பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

சென்னை சென்ட்​ரல் - கூடூர், சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் - ரேணி​குண்​டா, அரக்​கோணம் - ஜோலார்​பேட்டை ஆகிய வழித் தடங்​களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்​தில் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இதற்​கிடை​யில், சென்னை சென்ட்​ரல் - கோயம்​புத்​தூர் வழித்​தடத்​தில், ஜோலார்​பேட்டை - கோயம்​புத்​தூர் வரை பாதையை மேம்​படுத்​தும் பணி நடை​பெற்று வந்​தது. இப்​பணி முடிந்​ததைத் தொடர்ந்​து, ஜோலார்​பேட்டை - கோயம்​புத்​தூர் (286 கி.மீ) மார்க்​கத்​தில் அதிவேக ரயில் சோதனை ஓட்​டம் அண்​மை​யில் நடை​பெற்​றது. அப்​போது, 145 கி.மீ. வேகத்​தில் ரயிலை இயக்கி சோதிக்​கப்​பட்​டது.

இப்​பாதை​யில் மணிக்கு 130 கி.மீ வேகத்​தில் ரயில்​களை இயக்க அனு​மதி கிடைத்த பிறகு, பயணி​களின் பயண நேரம் குறை​யும். இது குறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ஜோலார்​பேட்டை - கோவை தடத்​தில் வேகத்தை அதி​கரிக்க ரயில் பாதை​யின் தரம், சிக்​னல் தொழில்​நுட்​பம், பயணி​கள் பாது​காப்பு அம்​சங்​கள் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

தெற்கு ரயில்​வே​யில் கடந்த 3 ஆண்​டு​களில், 2,794 கி.மீ தொலை​வுக்கு ரயில் பாதைகள் தரம் உயர்த்​தப்​பட்​டு, மணிக்கு 110 கி.மீ வேகத்​தில் ரயில்​கள் இயக்கப்படுகின்றன.

வரும் 2026-27-ம் நிதி​யாண்​டில், சென்னை எழும்​பூர் - விழுப்​புரம், விழுப்​புரம் - விருத்​தாசலம், விருத்​தாசலம் - திருச்​சி, கொல்​லம் - திரு​வனந்​த​புரம், சொரனூர் - கண்​ணூர், கண்​ணூர் - மங்​களூர் ஆகிய 6 வழித்​தடங்​களில் 711 கி.மீ. தொலை​வுக்கு மணிக்கு 130 கி.மீ. வரை வேகத்​தில் ரயில்​களை இயக்க பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். இதற்​காக, ரயில் பாதை, தானி​யங்கி சிக்​னல் முறை தரம் உயர்த்​தப்​படும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.

அடுத்த நிதியாண்டில் 6 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை: தெற்கு ரயில்வே
எண்ணூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த இளைஞருக்கு ‘பளார்’ விட்ட போலீஸ்காரர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in