சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் குஜராத் பொறியாளர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் குஜராத் பொறியாளர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

சிவகாசி: சிவ​காசி அருகே வடபட்​டி​யில் கிருஷ்ண​மூர்த்தி என்​பவருக்​குச் சொந்​த​மான ‘கிருஷ்ணா பைரோடெக்​னிக்​ஸ்’ என்ற பட்​டாசு ஆலை இயங்கி வரு​கிறது. நமஸ்​கரித்​தான்​பட்டி - எம்​.புதுப்​பட்டி சாலை​யில் உள்ள இந்த வளாகத்​தில் மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் வெடிபொருள் கட்​டுப்​பாட்டு அமைப்​பின் உரிமம் பெற்ற 3 யூனிட்​கள் இயங்கி வரு​கின்​றன.

இந்த பட்​டாசு ஆலை​யில் உள்ள ஒரு அறை​யில் நேற்று பிற்​பகல் 2 மணி அளவில் வேதிப்​பொருள் கலவை செய்​வதற்​காக வாங்​கப்​பட்ட புதிய இயந்​திரம் பொருத்​தப்​பட்​டது. குஜ​ராத் மாநிலம் பரோ​டாவைச் சேர்ந்த அகமது இப்​ராகிம்​(45) என்ற பொறி​யாளர் இயந்​திரத்தை பொருத்​தி, சோதனை செய்து கொண்​டிருந்​தார். அப்​போது ஏற்​பட்ட திடீர் வெடி விபத்​தில் அங்​கிருந்த பட்​டாசு ஆலை காசாளர் பால​முரு​கன் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

பொறி​யாளர் அகமது இப்​ராகிம் 95 சதவீத தீக்​கா​யங்​களு​டன் சிவ​காசி அரசுமருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டு, தீவிர சிகிச்​சைக்​காக விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வமனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். கைகளால் மருந்​துக்​கல​வையை தொழிலா​ளர்​கள் தயாரிக்​கும்​போது அடிக்​கடி விபத்து ஏற்​பட்டு உயி​ரிழப்பு நடப்​பதைத் தவிர்க்க இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தற்​போது அந்த இயந்​திரமே விபத்​தில் சிக்​கியுள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்து வந்தசிவ​காசி தீயணைப்​பு துறை​யினர் தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். திருத்​தங்​கல் போலீ​ஸார் வழக்​குப் ​ப​திவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். உயிரிழந்த குஜராத் பொறியாளரின் சொந்த ஊர் திருநெல்வேலி பேட்டை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் குஜராத் பொறியாளர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in