‘ஜெம்’ வீரமணி உள்ளிட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை: 2 நாள் காவலில் எடுத்தது சிறப்பு புலனாய்வுக் குழு

சென்னை புழல் சிறையில் இருந்து பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக ‘ஜெம்’ வீரமணியை அழைத்துச் சென்ற சிறப்பு புலனாய்வுக் குழுவினர்.

சென்னை புழல் சிறையில் இருந்து பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக ‘ஜெம்’ வீரமணியை அழைத்துச் சென்ற சிறப்பு புலனாய்வுக் குழுவினர்.

Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணி உள்ளிட்ட 3 பேரை 2 நாள் காவலில் எடுத்த சிறப்பு புலனாய்வுக் குழு, மூவரையும் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை புகார்களின் அடிப்படையில் ‘ஜெம்’ வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், கணேசன் உள்ளிட்ட8 பேர் கைது செய்யப்பட்டனர். ‘ஜெம்’ வீரமணி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரிக்க பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில், பணப்பரிவர்த்தனை தொடர்பாக 3 பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கஅனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மூவரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை 11.30 மணி அளவில் புழல் சிறையில் இருந்த மூவரையும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மூவரிடமும் விசாரணை நடத்தி வரு கின்றனர். வழக்கை முடக்குவதற்காக யாருக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டது, பணப்பரிவர்த்தனைக்கு உதவியவர்கள் யார் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்படுவதாகத் தெரிகிறது. இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, சிங்கப்பூர் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில், சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை, எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அர்ச்சனா திடீரென மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அர்ச்சனா இன்று ஆஜராக சம்மன்: அர்ச்சனாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது. எனவே, 25-ம் தேதி (இன்று) காலை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அர்ச்சனாவுக்கு போலீஸார் நேரில் சம்மன் வழங்கியுள்ளனர்.

<div class="paragraphs"><p>சென்னை புழல் சிறையில் இருந்து பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக ‘ஜெம்’ வீரமணியை அழைத்துச் சென்ற சிறப்பு புலனாய்வுக் குழுவினர்.</p></div>
தேனி, திண்டுக்கல், மதுரைக்கு ரெட் அலர்ட்; தஞ்சை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in