பிஹார் தேர்தலுக்கு பிறகு எஸ்ஐஆர் பெரும் அச்சுறுத்தல்: திருமா குழப்பம்

பிஹார்  தேர்தலுக்கு பிறகு எஸ்ஐஆர் பெரும் அச்சுறுத்தல்: திருமா குழப்பம்
Updated on
1 min read

பிஹார் தேர்தல் முடிவுக்கு பிறகு எஸ்ஐஆர் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் தேசியதடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க செங்கல்பட்டு மாவட்டம், கீழக்கோட்டையூரில் 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அவருடைய கட்சியைச் சேர்ந்த பலர் என்னை சந்தித்தனர். அப்போது அவர்கள் முன்வைத்தமுக்கியமான கோரிக்கை தொடர்பாக முதல்வரை சந்தித்து ஒரு மனுவை வழங்கிஇருக்கிறோம்.

அதாவது இலங்கை அதிபர் அனுரதிசநாயக்கே புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இலங்கைதேசத்திற்காக உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த புதிய அரசமைப்புச் சட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கக்கூடிய வகையில் ஒரு கூட்டாட்சி நிர்வாக முறையை அரசமைப்புச் சட்டத்தின் வழியாக கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்தை இணைப்பதற்கு இந்திய அரசின் தலையீடு இன்றியமையாத தேவையாக உள்ளது. இந்திய அரசை தலையிட வைக்க தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் முன்வைத்த கோரிக்கை.

அதனடிப்படையில் இன்று முதல்வரை சந்தித்து தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசை உரிய முறைப்படி ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக புதிய அரசமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் தன்னாட்சி அதிகாரத்தை வழங்க ஆவண செய்ய வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை கள் அடங்கிய மனுவை வழங்கினோம்.

அவர் பரிசீலனை செய்வதாக கூறினார். பிஹார் தேர்தல் முடிவுக்கு பிறகுஎஸ்ஐஆர் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கின்ற சதி திட்டம்தான் நாடாளுமன்றத்தை கேள்விக்குறியாக்கும்.

மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதன் அடிப்படையில் தான் இந்த எஸ்ஐஆர் கொண்டுவரப்பட்டுள்ளது. சிஏஏ குடியுரிமை திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி தான் இது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in