பேட்மிண்டன் வீரர் சிவராஜன் சோலைமலைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

பாரா ஆசிய விளையாட்டு இரட்டையர் பிரிவில் வெள்ளி
பேட்மிண்டன் வீரர் சிவராஜன் சோலைமலைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் சிவராஜன் சோலைமலைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

வீரர் சிவராஜன் சோலைமலையின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும். அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இச்சாதனையைப் படைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்திடும் வகையில் அவரது வெற்றி அமைந்துள்ளது. வீரர் சிவராஜன் சோலைமலை, மேலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை

முதல்வர் விஜய் மற்றொரு பதிவில், “ஜப்பானில் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில் 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையை பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ள இந்த மகத்தான வெற்றி, தமிழகத்தின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர் தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

பேட்மிண்டன் வீரர் சிவராஜன் சோலைமலைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு
நிர்வாகிகள் கைது: தவெக அரசுக்கு எதிராக அக்.24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in