மாநிலங்களுக்கு உரிய அதிகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு

மாநிலங்களுக்கு உரிய அதிகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு
Updated on
1 min read

சென்னை: ​மாநிலங்​களுக்கு உரிய அதி​காரம் வேண்​டும் என்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் முயற்​சிக்குகர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா ஆதரவு தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில், மத்​திய - மாநில உறவு​கள் தொடர்​பாக உயர்​நிலைக்​குழு அமைக்​கப்​பட்​டு, அக்​குழு தனது முதல்​கட்ட அறிக்​கையை தமிழக அரசிடம் அளித்​தது. இந்​நிலை​யில், முதல்​வர்மு.க.ஸ்​டா​லினின் முயற்​சிக்கு கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா ஆதரவு தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து முதல்​வர் ஸ்டா​லினுக்கு அவர் எழு​திய கடிதம்: மத்​திய – மாநில உறவு​கள் குறித்த தேசிய அளவி​லான உரை​யாடலை மீண்​டும் தொடங்க வேண்​டும் என்ற தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முயற்​சிக்கு கர்​நாட​கா​வின் முழு ஆதர​வைத்தெரிவிக்​கிறேன்.

கூட்​டாட்சி என்​பது வெறும் அரசி​யல் கோரிக்கைஅல்ல, அது நமது அரசி​யலமைப்​பின் அடிப்​படை கட்​டமைப்பு. பல ஆண்​டு​களாக, நிதி மற்​றும் சட்ட விவ​காரங்​களில் அதி​காரம் மத்​திய அரசிடம் குவிக்​கப்​படு​வது, நமது அரசி​யலமைப்பை உரு​வாக்​கிய​வர்​கள் வகுத்த சமநிலை​யைச் சீர்​குலைத்​துள்​ளது.

மாநிலங்​களுக்​குத் தரப்​பட்​டுள்ள பொறுப்​பு​களை நிறைவேற்ற, அவற்​றுக்கு உரிய அதி​கார​மும், நிதி சுதந்​திர​மும் இருக்க வேண்​டும்.

அனைத்து மாநிலங்​களும் ஒன்​றிணைந்து விவா​திக்​க​வும், கூட்​டாட்சி தத்​து​வத்​தில் சமநிலையை மீட்​டெடுக்​க​வும் ‘மாநிலங்​களுக்கு இடையே​யான கவுன்​சில்' போன்ற ஒரு வலு​வான தளத்தை மத்​திய அரசு அமைத்​துத் தரவேண்​டும் என்று வலி​யுறுத்​துகிறேன்.

இந்​தி​யா​வின் ஜனநாயக மற்​றும் கூட்​டாட்சி கட்​டமைப்பை வலுப்​படுத்​தும் முயற்​சிகளில் ஆக்​கபூர்​வ​மாக பங்​களிக்ககர்​நாடகா தயா​ராக உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

முதல்​வர் ஸ்டா​லின் நன்றி: இதற்​கிடையே சித்​த​ராமை​யா​ வுக்கு நன்றி தெரி​வித்து முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட பதி​வில், ‘‘மத்​திய - மாநில உறவு​ குறித்து ஆராய, தமிழக அரசு அமைத்த உயர்​நிலைக் குழு அறிக்​கை​யின் முதற்​பாகம் குறித்த தங்​களது வரவேற்​புக்கு நன்​றி. கூட்​டாட்​சிக் கருத்​தி​யலைப் புதுப்​பிக்​கும் முயற்சி கூட்டு முயற்​சி​யாக அமைய வேண்​டும் எனத் தாங்​கள் அங்​கீகரித்​திருப்​ப​தை​ மிக​வும் பாராட்​டு​கிறேன்.

‘பன்​முகத்​தன்மை கொண்ட இந்தி​யக் குடியரசின் ஒற்​றுமையை ஒற்​றைத்​தன்மையால் நிலைக்கச் செய்ய முடி​யாது, அரசி​யலமைப்​ பின் வழியி​லான நம்​பகத்​தன்மைமூலமே அதை செய்ய இயலும்’ எனத் தாங்​கள் தெரி​வித்​திருக்​கும் கருத்து மிகச் சரி​யானது​’’ என தெரிவித்​துள்​ளார்​.

மாநிலங்களுக்கு உரிய அதிகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in