தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை

பணியிடங்களின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த வலியுறுத்தல்
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை
Updated on
1 min read

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களின் எண்​ணிக்​கையை 2 மடங்​காக உயர்த்​தும் அறி​விப்பை இன்று சட்​டப்​பேர​வை​யில் நடை​பெறவுள்ள சுகா​தா​ரத்​துறை மானியக் கோரிக்​கை​யில் வெளி​யிட அரசு மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு. தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டசபை​யில் சுகா​தா​ரத்​துறை மானியக் கோரிக்கை விவாதம் இன்று எடுத்​துக் கொள்​ளப்பட இருக்​கிறது.

உயிர்​காக்​கும் துறை​யான சுகா​தா​ரத்​துறைக்கு முதல்​வர் அதிக முக்​கி​யத்​து​வம் தரு​வார் என எதிர்​பார்க்​கிறோம். கடந்த அதி​முக ஆட்​சி​யிலும், திமுக ஆட்​சி​யிலும், சுகா​தா​ரத்​துறை​யின் சாதனை​கள் குறித்து பெரு​மை​யாக பேசுவதை​யும், கரவொலி எழுப்​புவதை​யும் மட்​டுமே வழக்​க​மாக வைத்​திருந்​தனர்.

ஆனால் கட்​டமைப்பை வலுப்​படுத்​து​வது குறித்து ஆக்​கப்​பூர்​வ​மாக சிந்​திக்​க​வில்​லை. கடந்த திமுக ஆட்​சி​யில் அரசு மருத்​து​வர்​கள் நலனுக்​கான எந்​த​வித அறி​விப்​பு​களை​யும் வெளி​யிட​வில்​லை.

தமிழகத்​தில் மிகப்​பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்ள முதல்​வர் விஜய், சுகா​தா​ரத்​துறையை வலுப்​படுத்​தும் வகை​யில் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். 37 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களின் கட்​டமைப்பை வலுப்​படுத்த வேண்​டும்.

குறிப்​பாக அனைத்து மருத்​து​வக் கல்​லூரி​களி​லும், அனைத்து சிறப்பு மற்​றும் உயர் சிறப்பு மருத்​து​வத் துறை இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்​றும் தாலுகா மருத்​து​வ​மனை​களை மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு இணை​யாக தரம் உயர்த்த வேண்​டும்.

அரசு மருத்​து​வ​மனை​களி​ல் மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை 2 மடங்​காக அதி​கரிக்க வேண்​டும். தனி​யார் மருத்​து​வ​மனை​களில் செய்​யப்​படும் அனைத்து மருத்​துவ பரிசோதனை​களும் அரசு மருத்​து​வ​மனை​களில் செய்​யப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும்.

இது போன்ற நடவடிக்​கைகளை முனைப்​புடன் செய்​தால் தமிழகத்​தில் நிச்​ச​யம் மிகப்​பெரிய மருத்​து​வப் புரட்​சியை ஏற்​படுத்த முடி​யும். தமிழகத்​துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்​து​வர்​களின் சேவையை அங்​கீகரிக்​கும் வகை​யில் அரசாணை 354-ஐ அமல்​படுத்​தி, அதன்​படி ஊதி​யம் வழங்க வேண்​டும்.

கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனைவி திவ்​யா, அரசு வேலை கேட்டு கடந்த 5 ஆண்​டு​கள் கண்​ணீர் சிந்​திய பிறகும் திமுக அரசு கருணை காட்டவில்லை. திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகள் குறித்த அறிவிப்பை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறை
“கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்” - பேரவையில் நிர்மல் குமார் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in