‘சிவகுமாரும் நானும் சகோதரர்கள்; 2028 தேர்தலில் கூட்டாக வேலை செய்வோம்’ - சித்தராமையா

சித்தராமையா சிவகுமார்

சித்தராமையா சிவகுமார்

Updated on
1 min read

பெங்களூரு: ‘டி.கே.சிவகுமாரும் நானும் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம், 2028 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டாக வேலை செய்வோம்’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்​நாட​கா​வில் சித்​த​ராமையா முதல்​வராக பதவி​யேற்று இரண்டரை ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்​கொடி உயர்த்தியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த நவ.29 அன்று முதல்வர் சித்தாரமையாவின் வீட்டுக்குச் சென்ற துணை முதல்வர் டி.கே.சிவகு​மார் அங்கு காலை உணவு சாப்பிட்டார். பின்​னர் இருவரும் தனி​யாக 15 நிமிடங்​கள் ஆலோ​சனை நட‌த்​தினர். அதன் பிறகு ‘தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை’ என இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று (டிச.2) மீண்டும் சித்தராமையா, சிவகுமார் இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். காலை உணவு சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்தராமையா, “நானும் டி.கே. சிவகுமாரும் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம். நாங்கள் ஒரே கட்சியில் இருக்கிறோம், ஒரே சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறோம், 2028 சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றாகச் செயல்படுவோம். இது சகோதரர்களுக்கு இடையிலான விஷயம். காங்கிரஸ் அரசாங்கத்திற்குள் எந்த கோஷ்டி வாதமும் இல்லை.

கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்த தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். கட்சியின் மேலிடம் மற்றும் ராகுல் காந்தி என்ன சொன்னாலும் நாங்கள் கேட்போம். டெல்லி வருகை குறித்து எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் இல்லை. அவர்கள் எங்களை அழைத்தால், நாங்கள் நிச்சயமாகச் செல்வோம்.” என்று அவர் கூறினார்.

சிவகுமார் எப்போது முதல்வராக வருவார் என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தராமையா, “கட்சியின் தலைமையே எப்போதும் இதுகுறித்து ஒரு முடிவை எடுக்கும்.” என்றார்.

டிசம்பர் 8-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் இரு தலைவர்களும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று கட்சியின் மேலிடம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு நடந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

<div class="paragraphs"><p>சித்தராமையா சிவகுமார்</p></div>
“விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு சரியே” - புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in