செந்தில் பாலாஜியை கைது செய்வது முதல்வர் விஜய்யின் சபதமாக இருக்கலாம்: எஸ்.ரகுபதி கருத்து

எஸ்.ரகுபதி

எஸ்.ரகுபதி

Updated on
1 min read

புதுக்கோட்டை: ​முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை கைது செய்​து​விட்​டுத்​தான் கரூருக்கே செல்ல வேண்​டும் என்​பது முதல்​வர் விஜய் போட்ட சபத​மாக இருக்​கலாம் என முன்​னாள் அமைச்​சர் எஸ்​.ரகுபதி எம்​எல்ஏ தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: மதி​முக எம்​எல்​ஏக்​கள் 2 பேரை​யும் ராஜி​னாமா செய்​யச் சொல்​லுங்​கள், இரு​வரை​யும் நான் வெற்றி பெற வைக்​கிறேன் என முதல்​வர் விஜய் சொன்​ன​தாக வைகோ வெளிப்​படை​யாகப் பேசி​யதே குதிரை பேரம் நடந்​துள்​ளதை காட்​டு​கிறது. ஆனால், இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறையோ அல்​லது காவல் துறையோ இது​வரை எந்த வழக்​கும் பதிவு செய்​ய​வில்​லை.

ஒவ்​வொரு எம்​எல்​ஏ​வாக தவெக​வுக்கு தாவுவது​தான் உண்​மை​யான குதிரை பேர அரசி​யல். நாங்​கள் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​டிருந்​தால் கூட்​டணி கட்​சிகள் தவெகவை ஆதரிக்க சொல்​லி​யிருக்க மாட்​டோம். தவெக எம்​எல்​ஏ​விடம் பேரம் பேசி​ய​தாக பதிவு செய்​யப்​பட்​டுள்ள வழக்​கைப் பொறுத்​தவரை, முன்​னாள்அமைச்​சர் செந்தில் பாலாஜியை கைது செய்​து​விட்​டுத்​தான் கரூருக்கே செல்ல வேண்டும் என்று முதல்​வர் விஜய் போட்ட சபத​மாக இருக்​கலாம் என எண்​ணத் தோன்​றுகிறது.

உண்​மை​யில், குதிரை பேரம் நடத்தி ஆட்சி அமைக்க வேண்​டும் என்று திமுக நினைத்​திருந்​தால், 2017-லேயே அதைச் செய்​திருக்​கலாம். நாங்​கள் ஜனநாயகத்தை நம்​பு​கிறோமே தவிர, பணநாயகத்தை அல்ல. முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர் மீது சொத்து குவிப்பு, குட்​கா, வரு​மான வரிசோதனை போன்ற வலு​வான ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. தற்​போது அவர் தவெக​வில் இணைந்​ததன் மூலம் மட்​டும் புனிதம் ஆகி​விடு​வா​ரா?

சட்​டப்​பேர​வை​யானது படப்​பிடிப்​புத் தளம் போல மாறி​யுள்​ளது. அதில் முதல்​வர் விஜய் ஹீரோ​வாக நடித்து வரு​கிறார். நாங்​கள் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​களாக நடித்து வரு​கிறோம். எல்​லோரை​யும் நடிகர்​களாக மாற்றி இருக்​கக்​கூடிய பெருமை தவெக ஆட்​சிக்கே சேரும். தற்​போது அமைந்​துள்ள தவெக கூட்​டணி என்​பது ஒரு ‘முற்​போக்கு கல்​லாப்​பெட்டி கூட்​ட​ணி’ ஆகும் என்​றார்.

<div class="paragraphs"><p>எஸ்.ரகுபதி </p></div>
ராமர் கோயில் நிதி முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் ஏன்? - காங்கிரஸ் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in