தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மூத்த பத்திரிகையாளரிடம் 2-வது நாளாக விசாரணை - செல்போன் பறிமுதல்

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மூத்த பத்திரிகையாளரிடம் 2-வது நாளாக விசாரணை - செல்போன் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: ஆட்சியை கவிழ்க்க தவெக எம்எல்ஏ​விடம் பேரம் பேசிய​தாக பதி​யப்​பட்ட வழக்கு தொடர்​பாக மூத்த பத்திரிகையாளரிடம் 2-வது நாளாக போலீ​ஸார் விசா​ரணை நடத்தினர்.

விஜய் தலை​மையி​லான ஆட்​சி​யைக் கவிழ்க்க தன்​னிடம் ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாக ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா அளித்த புகாரின் பேரில், சென்னை அரும்​பாக்​கத்தை சேர்ந்த யூடியூபர் திரு​நாவுக்​கரசு உள்​ளிட்ட சிலரை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த வழக்கு தொடர்​பாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் பெற்​றுள்​ளனர்.

வழக்​கின் ஆவணங்​கள் மற்​றும் மின்​னணு ஆதா​ரங்​களை ஆய்வு செய்​த​போது, குற்​றச்​சதி நடை​பெற்ற கால​கட்​டத்​தில் பிரபல தனியார் தொலைக்​காட்​சி​யின் மூத்த பத்​திரி​கை​யாளர் ஒரு​வர் திருநாவுக்​கரசுடன் தொடர்ந்து குறுஞ்​செய்​தி​கள் பரி​மாறி தொடர்பில் இருந்​த​து தெரிய​வந்​த​தாக போலீஸ் தரப்​பில் கூறப்பட்டுள்​ளது.

இதையடுத்து அந்த பத்​திரி​கை​யாள​ருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டு, நேற்று முன்​தினம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. நேற்று 2-வது நாளாக​வும் அவரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. மேலும், சைபர் தடய​வியல் பகுப்​பாய்​வுக்​காக அவரது செல்​போனை​யும் போலீஸார்​ பெற்​றுக்​கொண்​டனர்​.

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: மூத்த பத்திரிகையாளரிடம் 2-வது நாளாக விசாரணை - செல்போன் பறிமுதல்
ரூ.11.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கள்ள நோட்டுகளை கடத்திய பெண்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in