

செங்கோட்டையன்
கோவை: வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் சரித்திர வெற்றியை தவெக பெற்றுள்ளதாக, செங்கோட்டையன் தெரிவித்தார்.
பீளமேடு விமான நிலையத்தில் கோபி தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் செய்யவேண்டும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தியாகத்தால் வளர்ந்த இயக்கம் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. மக்கள் சக்தியாக தற்போது தவெக மாறியிருக்கிறது.
வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காமல் முதல் தேர்தலில் சரித்திர வெற்றி பெற்றுள்ளோம். விஜய்யை மக்கள் நேசிக்கிறார்கள். நேசிக்கின்ற மக்களுக்கு அவர் உறுதுணையாக இருப்பார். மனிதநேயம் அவரிடத்தில் இருக்கிறது. அதனை நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.