“சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” - செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

Updated on
1 min read

சென்னை: “சி.வி.சண்முகம் இப்படி பெண்களை இழிவுப்படுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை எந்த ஒரு ஜனநாயகவாதியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை எந்த சித்தாந்தத்தில் இருக்கிறார்களோ, அந்த சித்தாந்தத்தை நோக்கி அதிமுக சென்று கொண்டு சென்றுவிட்டது.

அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் இப்படி பேசியிருப்பது எந்த விதத்தில் நியாயம்? தாயுக்கும், தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத சி.வி.சண்முகம் இப்படி பெண்களை இழிவுப்படுத்தி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை எந்த ஒரு ஜனநாயகவாதியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

சி.வி.சண்முகம் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மகிளா காங்கிரஸ்காரர்கள் கருப்புக் கொடி காட்ட வேண்டும். ஜனநாயக முறையில் அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்.

பாஜக தலைவர்கள்தான் வட மாநிலத்தில் பெண்களை இவ்வாறு பேசுவார்கள். பாஜகவுடன் சென்று விட்டதால் பாஜகவின் முழுமையான குணங்கள் அதிமுகவினருக்கு வந்துவிட்டதா? ஏன் எடப்பாடி பழனிச்சாமி இதை கண்டிக்கவில்லை. அவர் சி.வி.சண்முகத்தை கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும் அல்லது கண்டித்திருக்க வேண்டும். அவர் எதுவும் தெரியாதது போல் அமைதி காக்கிறார்.

தெற்கு, மேற்கு கூட தெரியாமல் இருப்பவர்களுக்கு ரஜினிகாந்த் பற்றி என்ன தெரியும். ரஜினிகாந்த் எதற்கும் ஆசைப்படாமல், ஒரு ஞானியை போல வாழ்ந்து வருகிறார். தமிழகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய கொடை அவர். ரஜினிகாந்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எந்தவித வம்புக்கும், அரசியலுக்குள்ளும் நுழையாதவர். இதை ஆதவ் அர்ஜுனா திரும்ப பெற வேண்டும். வன்மத்தோடு பேசுவது, வயது முதிர்ந்தவர்களை தாக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>செல்வப்பெருந்தகை</p></div>
நடிகை பெயரைக் குறிப்பிட்டு பேசிய சி.வி.சண்முகம் மீது கனிமொழி, ஜோதிமணி சரமாரி தாக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in