“தமிழகத்தில் வெற்றிக்கு முன்னோட்டம்” - செல்வப்பெருந்தகை உற்சாகம்

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்

Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. கேரளாவில் 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.

தமிழகத்தில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 2.09 கோடி (45.3 சதவீதம்) வாக்குகளை திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி பெற்று தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.

இண்டியா கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை சேர முன்வரவில்லை. பாமக உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அதிமுகவிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 2026 தேர்தலில் இண்டியா கூட்டணி மீண்டும் உறுதியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கைக்கு ஊக்கம் தரும் வகையில் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபாரவெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்</p></div>
“இப்ப இல்லன்னா எப்பவுமே இல்ல ராஜா” - சொல்கிறார் ஹெச்.ராஜா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in