“இந்தியை எதிர்த்து போராடிய மாணவர்களை சுடச் சொன்னவர் ஈவெரா” - சீமான் சீற்றம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

‘‘இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈவெரா. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம் தான்’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று திருச்சிவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று தான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார். ஆனால், திராவிடம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான். அவர் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பேசுகிறார்.

திராவிடம் தமிழை எங்கே காக்கிறது? தமிழகத்தில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதவோ தெரியாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மொழி, கலை, இலக்கியம், வரலாறு, அரசியல் என தமிழர்களுக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்தி எதிர்ப்புக்காக போராடிய மாணவர்களை துப்பாக்கியால் சுடச் சொன்னவர் ஈவெரா. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இந்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நாடகம் தான். போதைப் பொருள் குறித்து பேச தமிழக அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை. போதைப் பொருளைத் தடுப்போம் என முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

காவல் துறை ஆதரவில்லாமல் போதைப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. மக்களின் கோரிக்கைகளை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிப்போம் என திமுக கூறி உள்ளது. மக்களுக்கு என்ன பிரச்சினை என தெரியாமலேயே ஆட்சி செய்கிறீர்களா என்கிற கேள்வியை இது எழுப்பி உள்ளது. இந்த மண்ணில் நிலவும் திராவிடம், இந்தியம் என்கிற ஆட்சி முறையை மாற்றுவது தான் மாற்றம். கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும். ஆனால், ஆட்சி முறை மாறாது.

காங்கிரஸ் - பாஜக-வுக்கும் திமுக - அதிமுக-வுக்கும் எந்தக் கோட்பாடு மாற்றமும் கிடையாது. திமுக-வுக்கு மாற்று அதிமுக எனக் கூறுவது, வெறும் வார்த்தையில் தான். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கோடநாடு கொலை - கொள்ளை விவகாரம் உள்ளிட்டவற்றில் இதுவரை இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள். தமிழகத்தை யார் அதிகம் நாசம் செய்வது என்பதில்தான் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையே போட்டி உள்ளது. ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

தீயசக்திக்கு மாற்று தூயசக்தி, தூய ஆற்றல் தான். எங்களைப்போல தொடர்ச்சியாக மாறுதலுக்காக போராடுபவர்கள் தான்,இவர்களுக்கு மாற்றாக இருக்க முடியும். இலங்கையில் தமிழ் இன மக்கள் 20 ஆயிரம் பேருக்கு மேல் கொன்று குவித்தது இந்த நாட்டு ராணுவம். அதை அனுப்பியது ராஜீவ் காந்தி. எந்த தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்களோ, அவர்களின் வாக்கை வாங்கி அரசியல் அதிகாரத்தை பெற்றுவிட்டு, இன்று பிரபாகரன் படத்தை வைத்தால், அந்நிகழ்ச்சிக்கு வரமாட்டோம் என்கிறார்கள். தன்மானமிக்க தமிழக மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என முடிவெடுக்க மாட்டேன் என்கிறார்கள். திராவிட கட்சிகள் மாறிமாறி கூட்டணி வைத்ததால் தான் காங்கிரஸ் கட்சியினர் இது போல் பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தேர்தல் அறிக்கைக்கு கருத்துச் சொல்ல பிரத்யேக செயலி: ஸ்டாலின் அறிமுகம் செய்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in