“தம்பி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வாழ்த்துகள்” - சீமான்

சீமான்

சீமான்

Updated on
1 min read

சென்னை: “பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக புதிய அரசுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.

மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>சீமான் </p></div>
மேற்கு வங்கம், அசாம் முதல்வர்களை தேர்வு செய்ய மத்திய பார்வையாளர்களாக அமித் ஷா, நட்டா நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in