கடும் குற்ற வழக்குகளில் ஜாமீன் ரத்து கோரும் மனுக்களை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட்

மாவட்ட நீதிமன்றங்களுக்கு உத்தரவு
கடும் குற்ற வழக்குகளில் ஜாமீன் ரத்து கோரும் மனுக்களை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட்
Updated on
1 min read

மதுரை: கடும் குற்றங்களில் தொடர்புடையவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்களை 4 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்ட கைதியாக உள்ள வினோத், தன் மீது குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, முருகேசன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ‘கடும் குற்றச் செயலில் ஈடுபடுவோர் ஜாமீனில் இருக்கும்போது நிபந்தனைகளை மீறினால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்யாமல் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கூடாது.

கடுமையான குற்றங்களை தடுக்கும் நோக்கில், மாவட்ட நீதிமன்றங்களில், தாக்கல் செய்யப்படும் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்களை விசாரணைக்கு எடுத்து நோட்டீஸ் அனுப்பிய நாளிலிருந்து 4 வாரங்களில் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட நீதிபதிகளும் பின்பற்ற வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

கடும் குற்ற வழக்குகளில் ஜாமீன் ரத்து கோரும் மனுக்களை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட்
நாமக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த சிறார்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in