படிவம்-6 விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பின்வாங்கியது ஏன்? - எஸ்டிபிஐ கட்சி கேள்வி

படிவம்-6 விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பின்வாங்கியது ஏன்? - எஸ்டிபிஐ கட்சி கேள்வி
Updated on: 
1 min read

சென்னை: எஸ்டி​பிஐ கட்​சி​யின் தேசிய துணைத் தலை​வர் முகமது ஷஃபி வெளி​யிட்​டுள்ள அறிக்கை: எஸ்ஐஆர் நட​வடிக்​கை​யின்​போது படிவம்-6 உள்​ளிட்​ட​வற்​றில் பல்​வேறு நிபந்​தனைகள் கட்​டாய​மாக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், தேர்​தல் ஆணை​யம் தனது முந்​தைய முடி​வில் இருந்து பின்​வாங்​கியது சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது. எஸ்ஐஆர் நட​வடிக்கை தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்ட பல மாநிலங்​களில், கோடிக்​கணக்​கானவர்​களின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன.

அந்த மாநிலங்​களில் ஆட்சி மாற்​றங்​களும் நிகழ்ந்த பின்​னர் தற்​போது தேர்​தல் ஆணை​யம் தனது முடிவை திரும்​பப் பெறு​வது, குதிரை ஓடிய பிறகு லாயத்​தைப் பூட்​டுவது போன்​றது.

மேலும், உச்ச நீதி​மன்​றமும் இத்​தகைய கட்​டாயங்​களை அங்​கீகரிக்​காத நிலை​யில், இந்த சட்​ட​விரோத நட​வடிக்​கைக்கு துணைபோனவர்​கள் யார் என்று தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளிக்க வேண்​டும். தலை​மைத் தேர்​தல் ஆணை​யரின் தன்​னிச்​சையான செயல்​பாடுகள் குறித்​து விசா​ரணை நடத்​தப்​பட வேண்​டும்.

படிவம்-6 விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பின்வாங்கியது ஏன்? - எஸ்டிபிஐ கட்சி கேள்வி
மரகதம் குமரவேல் உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

X